சென்னை வரும் வெளியூர் பஸ்கள்...இனி இந்த பக்கம் தான் வரும்:  அரசு உத்தரவு

Feb 17, 2023,03:54 PM IST
சென்னை : வெளியூரில் இருந்து சென்னை வரும் பஸ்கள் செல்லும் வழி தடம், கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பினை தமிழக போக்குவரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.



போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவில், வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு பஸ்கள் பகலில் இனி தாம்பரம் வழியாக செல்லலாம். அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வரும் அரசு பஸ்கள் தாம்பரம் வழியாக இயக்கப்படும். 



தாம்பரம் பஸ் ஸ்டாப்பிற்கு இடது புறமாக நிறுத்தி பணிகளை இறக்கிவிட வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பஸ்கள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆகியோருக்கு போக்குவரத்து துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்பு இப்படித்தான் பஸ்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. அதை பின்னர் மாற்றினார்கள். இப்போது திரும்பவும் அதேபோன்று மாற்றம் செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஓவலில் இந்தியா அதிரடி.. 6 ரன் வித்தியாசத்தில் ஸ்டன்னிங் வெற்றி.. டெஸ்ட் தொடர் சமன்!

news

நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

அருணாச்சலப் பிரதேச விவகாரம்: ராகுல் காந்தி பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

news

வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

news

தொடர் மழை... வைகை அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

news

கவின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல்!

news

திமுகவின் சுரண்டல் கொள்கையால் மக்கள் வாழ்க்கை நடத்தவே வழியின்றி தடுமாறுகின்றனர்: டாக்டர் அன்புமணி!

news

முதல்வருடன் சந்திப்பு.. ஓபிஎஸ் திடீர் அறிக்கைக்கு இது தான் காரணமா.. அடுத்து என்ன செய்வார்?

news

சிபு சோரன்.. மறக்க முடியாத அரசியல்வாதி.. ஜார்க்கண்ட் அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்