கேன்ஸ் விழாவில் திரையிடப்படும் இந்திய படங்கள்.. ஆர் ஆர் ஆர் படத்துக்கு நோ!

May 16, 2023,04:39 PM IST
கேன்ஸ் : 76 வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் இன்று (மே 16) துவங்கி உள்ளது. மே 16 ம் தேதி துவங்கி மே 27 ம் தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது. சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய மொழி சினிமாக்கள், டாக்குமென்ட்ரி உள்ளிட்டவைகள் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளன. 12 நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில் இந்திய திரையுலகை சேர்ந்த டைரக்டர் அனுராக் காஷ்யாப், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.



கேன்ஸ் திரைப்பட விழா 2023 ல் திரையிடப்பட உள்ள இந்திய படங்கள் பற்றிய பட்டியலை இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அனுராக் காஷ்யாப்பின் கென்னடி, ராகுல் ராய் நடித்த ஆக்ரா உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் சன்னி லியோன், ராகுல் பட் நடித்த கென்னடி படம் மிட்நைட்டில் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மணிப்பூரி மொழி படங்களும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தென்னிந்திய மொழி படங்கள் எதுவும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தேர்வு செய்யப்படவில்லை. அதிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, ஆஸ்கார் வென்ற ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தேர்வு செய்யப்படாதது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதே சமயம் சன்னி லியோன் நடித்த கென்னடி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த படம் ஒரு போலீஸ் அதிகாரி பற்றிய த்ரில்லர் படம் தான் என்றாலும் அனுராப் காஷ்யாப் படம் என்பதால் இது நம்ப முடியாத தகவலாகவே உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்