இதை எதிர்பார்க்கலையே.. திடீரென கொட்டிக் குவித்த மழையால்.. ஸ்டன் ஆன  சென்னை!

Jun 19, 2023,09:40 AM IST
சென்னை: சென்னை மக்கள் இந்த திடீர் ஜூன் மாத மழையை சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீரென கொட்டிக் குவித்த கன மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மக்களை நிலைகுலைய வைத்து விட்டது.

வழக்கமாக கோடை காலத்தில் இப்படி ஒரு மழை சென்னைக்கு வருவது மிக மிக அரிதாகும். கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு முன்புதான் இப்படி ஒரு பேய் மழை பெய்து தீர்த்தது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் மிகக் கடுமையான வெயில் பதிவாகி வந்த நிலையில் நேற்று திடீரென நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப் போனது.



சஹாரா பூமி போல அனல் பறக்கக் காணப்பட்ட சென்னை நேற்று காலை முதல் ஊட்டி கொடைக்கானல் போல மாறியது. விட்டு விட்டுப் பெய்த மழையால் பெருமளவில் வெட்கை தணிந்தது. ஆனால் இரவில் நிலைமை இன்னும் வேகமாக மாறியது. மெல்லத் தொடங்கிய மழையானது அப்டியே வேகம் பிடித்து கன மழையானது. நள்ளிரவுக்கு மேல் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது.

இந்த திடீர் கன மழையால் சென்னை மக்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். ஜூன் மாதத்தில் இப்படி ஒரு கன மழையா என்ற குழம்பிப் போயினர். ஆனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகத் தொடங்கியது. பல பகுதிகளில் தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்க ஆரம்பித்தது. இதனால் ராத்திரியில் பல பகுதிகளில் மக்கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

திடீர் வெள்ளத்தால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தால் மக்கள் சிறு பாதிப்பை சந்திக்க நேரிட்டது. பல வீடுகளில் பிள்ளைகளின் பள்ளிப் புத்தகங்கள், பொருட்கள் உள்ளிட்டவை நனைந்து போய் அவர்கள் வேதனை அடைந்தனர்.

இப்படி ஒரு மழையை இப்போது எதிர்பார்க்கவில்லை. லேசாக பெய்து விட்டுப் போய் விடும் என்றுதான் நினைத்தோம். ஆனால் இப்படி வெள்ளம் போல வரும் என நினைக்கவில்லை என்பதே சென்னைவாசிகள் பலரின் கருத்தாக உள்ளது. தற்போது மழை மெல்ல குறைந்து லேசாக பெய்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு சீரமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களில் அதை வடியச் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்