வெளியில் ஹீட் அதிகரிக்க அதிகரிக்க.. வீட்டுக்குள் உக்கிரமாகும் "கலவரம்"..  கலகல சர்வே!

Jul 01, 2023,03:44 PM IST
டெல்லி:  புவி வெப்பமயமாதலால் வீட்டு வன்முறையும் அதிகரிப்பதாக ஒரு சர்வேயில் சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, நேபாளம், பாகிஸ்தானில் இந்த வீட்டு வன்முறை அதிகரிப்பு காணப்படுவதாக இந்த சர்வே கூறியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாள நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் யாருமே ஒரு முறை கூட ஆண்களுடன் உடல் ரீதியாக ஒன்று சேர்ந்தவர்கள் ஆவர். அதாவது திருமணம் ஆனவர்கள் அல்லது லிவ் இன் போன்ற உறவில் இருப்பவர்கள் ஆவர்.



இவர்களிடையே நடத்திய ஆய்வின்போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்ததாம். வருடா வருடம் உயரும் வெப்ப நிலை காரணமாக இவர்கள் வீட்டு வன்முறைக்கு ஆளாவதும்  அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆண்களுடன் உறவில் உள்ள பெண்கள் வீட்டு வன்முறைக்குள்ளாவது 21 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்றும் இந்த சர்வே கூறுகிறது. குறிப்பாக இந்தியாவில் இது 23.5 சதவீதமாக இருக்கும் என்றும் இது கணித்துள்ளது.

ஜமா சைக்கியாட்ரி என்ற இதழில் இதுதொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள மத்திய வர்க்கம் மற்றும் குறைந்த வருமானப் பிரிவு பெண்களுக்கிடையே அதிகரிக்கும் குடும்ப வன்முறை என்ற பெயரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

அதிகரிக்கும் வெப்ப நிலை காரணமாக தங்களது பார்ட்னர்களிடமிருந்து அதிக அளவிலான எரிச்சல், கோபம், அடி உதை, மன உளைச்சல் போன்றவற்றை சந்திப்பதாக இவர்கள் தெரிவித்தனராம்.  உடல் ரீதியான கொடுமைகளில் பாலியல் ரீதியிலான சித்திரவதைகளும் அடக்கம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்