மதுரையில் ராஜமவுலி.. ஜிகர்தண்டா குடிச்சுக்கிட்டே செல்பி..  கவனிச்சீங்களா!?

Jul 11, 2023,02:11 PM IST
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமவுலி சத்தம் போடாமல் தமிழ்நாட்டுப் பக்கம் தனது குடும்பத்தோடு ஒரு குட்டி விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார். 

மதுரையில் ஜில் ஜில் ஜிகர்தண்டாவும் குடித்து மகிழ்ந்திருக்கிறார். இதுதொடர்பான ஒரு வீடியோவையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

பாகுபலிக்கு முன்பு பாகுபலிகுக்குப் பின்பு என்று ராஜமவுலியை இரண்டாக பிரிக்கலாம்.. பாகுபலிக்கு முன்பு அவர் பாய்வதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பாகுபலிக்குப் பின்னர் ராஜமவுலியின் வேகமே வேறு லெவலுக்குப் போய் விட்டது.



பாகுபலி இந்திய அளவில் சினிமா உலகை புரட்டிப் போட்டது என்றால் அவரது ஆர்ஆர்ஆர் உலக அளவில் அவரைக் கொண்டு போய்விட்டது. சர்வதேச திரை ரசிகர்களிடையே இந்தியத் திரையுலகை வேறு கோணத்துக்கு கொண்டு போய் விட்டது. ஆஸ்கர் விருதை தட்டி வந்த ஆர்ஆர்ஆர் மூலம் ராஜமவுலி சர்வதேச திரையுலகை தன் பக்கம் ஈர்த்து விட்டார்.

இந்த நிலையில் தனது குடும்பத்துடன் ஜாலியாக தமிழ்நாட்டுக்குள் ஒரு சுற்றுலா வந்து போயிருக்கிறார் ராஜமவுலி. இதுகுறித்து அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில்,  மத்திய தமிழ்நாட்டில் சாலை மார்க்கமாக ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டு வந்தேன். எனது மகள் கோவில்களுக்குப் போகலாம் என்று கூறியதால் எனது ஆசையும் கூடவே நிறைவேறி விட்டது.

ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், ராமேஸ்வரம், கானாடு காத்தான், தூத்துக்குடி, மதுரை என போய் வந்தோம். சில நாட்கள் மட்டுமே பயணத் திட்டம் என்பதால் அதிகம் போக முடியவில்லை. பாண்டிய மன்னர்கள், சோழர்கள், நாயக்கர்கள் உள்ளிட்ட மன்னர்களின் அருமையான கட்டடக் கலைப் படைப்புகள், கட்டுமானங்கள், ஆழமான இறைப் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அத்தனையும் பிரமிக்க வைத்தது.

இன்னொரு முக்கியமான விஷயம் சாப்பாடு... அது மந்திரக் கூடமாக இருக்கட்டும்.. கும்பகோணமாக இருக்கட்டும்.. ராமஸே்வரம் காக்கா ஹோட்டல் முருகன் மெஸ்ஸாக இருக்கட்டும்.. பிரமாதமாக இருந்தன.  எல்லா இடத்திலும் சாப்பாடு அட்டகாசம். கண்டிப்பாக 2, 3 கிலோ எடை கூடியிருப்பேன். அப்படி சாப்பிட்டேன். 

3 மாத வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு அமைந்த இந்த உள்நாட்டுப் பயணம் ரொம்ப புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது, உற்சாகமாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜமவுலி.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்