"ஏன்டா இம்ரான் கானை பிரதமராக்கினோம்னு இருக்கு".. அலுத்துக் கொண்ட மியான்தத்!

Jul 02, 2023,01:32 PM IST
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் பிரதமர் பதவிக்கு உயர நான் நிறைய உதவி செய்தேன். ஆனால் அதற்காக தற்போது வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும், இம்ரான் கானின் நெருங்கிய நண்பருமான ஜாவேத் மியான்தத்.

மியான்தத் குறித்து அந்தக் கால கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிறைய தெரியும். அவர் செய்யாத சேட்டையே இல்லை மைதானத்தில். எதிரணியினரை குறிப்பாக இந்திய வீரர்களை சீண்டுவது என்றால் இவருக்கு லட்டு சாப்பிடுவது போல. அத்தனை சேட்டை செய்தார். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுப்பது வழக்கம். 

இரு அணிகளும் சந்தித்தாலே அங்கே அனல் பறக்கும். கபில்தேவ் தலைமையிலான அணியும், இம்ரான் கான் அணியும் சந்தித்தாலே பட்டையைக் கிளப்பும் போட்டிகள். இம்ரான் கான் அணியில் முக்கிய வீரராக இடம் பெற்றிருந்தவர்தான் மியான்தத். நம்ம ஊரில் எப்படி கவாஸ்கரோ அதுபோலத்தான் பாகிஸ்தானுக்கு மியான்தத்.

மியான்தத்துக்கும், நம்ம ஊரில் தீவிரவாத வேலைகளைச் செய்து தேடப்படும் குற்றவாளியாக திகழும் தாவூத் இப்ராகிமுக்கும் இடையே நெருங்கிய உறவும் உள்ளது. இருவரும் சம்பந்திகள் ஆவர். இந்த நிலையில், இம்ரான் கான் குறித்து புலம்பியுள்ளார் மியான்தத்.

 


இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ஆரி நியூஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,  பாகிஸ்தான் தெஹரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பிரதமர் பதவிக்கு உயர நான் உதவினேன்.  ஆனால் அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன்.

அவருக்கு உதவிய எனக்கு இதுவரை அவர் ஒருமுறை கூட நன்றி சொன்னதே இல்லை.  இப்படிப்பட்டவருக்குப் போய் உதவினோமே என்று வருத்தமாக இருக்கிறது.

எனது தந்தைக்கு கிரிக்கெட் என்றால் உயிர். நானும் சரி எனது சகோதரர்களும் சரி கிரிக்கெட் விளையாடாத இடங்களே இல்லை. தெருவில் விளையாடியிருக்கிறோம். வீட்டு மாடி  மீது கூட விளையாடியிருக்கிறோம். எப்போதெல்லாம் நாட்டுக்காக நான் கிரிக்கெட் ஆடினேனோ அப்போதெல்லாம் நமது அணி தோல்வி அடையக் கூடாது என்ற வேகத்தில்தான் ஆடுவேன். தோல்வியே அடைந்தாலும் கூட பெரியஅளவில் வித்தியாசம் இல்லாமல்தான் பார்த்துக் கொள்வேன்.

நான் கேப்டனாக இருந்தபோது ஒரு வீரர் கூட என்னிடம் முரண்பட்டதில்லை. ஆட்சேபனை தெரிவித்ததில்லை. நான் அப்படித்தான் வீரர்களுடனும் பழகுவேன் என்று கூறியுள்ளார் மியான்தத்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை

news

TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்

news

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!

news

விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!

news

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்

news

Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு

news

10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!

news

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

news

மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்