ஊழல் வழக்கில் இம்ரான் கானின் கட்சி தலைவர் கைது

Jun 02, 2023,03:39 PM IST
இஸ்லாமாபாத் : இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சஃப் கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி, ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரான பர்வேஸ் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி கைது நடவடிக்கையில் இருந்து கடந்த வாரம் தற்காலிக நிவாரணம் பெற்றார் பர்வேஸ். அவர் நெஞ்சுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக அவரது மருத்துவ சான்றிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  


ஆனால் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்து வந்தார் பர்வேஸ். இந்நிலையில் திடீரென பர்வேஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பாகிஸ்தானில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், வீட்டு காவலில் இருந்த பர்வேஸ் வீட்டில் இருந்து தப்ப முயன்றதாகவும், அவரை போலீசார் தடுத்து, கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இம்ரான் கான் கைது சம்பவத்திற்கு பிறகு அவரது கட்சியை சேர்ந்த ஊற்றுக்கணக்கான தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மே 09 ம் தேதி முதல் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் வன்முறையை தூண்டியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்