செல்ஃபி எடுங்க...ரூ.10,000 பரிசு வெல்லுங்கள்.. மத்திய அரசு அறிவிப்பு

Aug 14, 2023,12:26 PM IST
டில்லி : சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் குடிமக்களை சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வைப்பதற்காக மத்திய அரசின் சார்பில் செல்ஃபி போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.10,000 பரிசும் அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 77 வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்திய அரசின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் குடிமக்களையும் கொண்டாடுவதை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்று தான் ஆன்லைன் செல்ஃபி போட்டி. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், MyGov உடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது. ஆகஸ்ட் 15 ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 20 வரை இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன.



இதற்காக 12 இடங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இந்த இடங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று, அழகாக செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும். இந்த 12 இடங்களில் எடுக்கப்பட்ட செல்ஃபிகளில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் செல்ஃபி எடுத்தவர்களில், தலா இடத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செல்ஃபி போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், MyGov இணையதளத்திற்கு சென்று Login to participate என்பதை கிளிக் செய்து, அக்கவுண்டை உருவாக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை அளித்தால் போட்டிக்கான விதிமுறைகள் திரையில் வரும். அவற்றை படித்துப் பார்த்த பிறகு, செல்ஃபி எடுக்கப்பட்ட இடத்தை தேர்வு செய்து, உங்களின் செல்ஃபியை அப்லோடு செய்ய வேண்டும். பொதுமக்கள் செல்ஃபி எடுப்பதற்காக இந்த 12 இடங்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த 12 இடங்களும் டில்லியிலேயே உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்