சென்னை : இயக்குநர் ஷங்கரின் இந்தியன்2 படம் மீண்டும் சிக்கலைச் சந்தித்துள்ளது.
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படம் 2019 ம் ஆண்டே துவங்கப்பட்டது. ஆனால் துவங்கிய சில மாதங்களிலேயே விபத்து, வழக்கு என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை இந்த படம் சந்தித்து வருகிறது. பல கட்ட பிரச்சனை, போராட்டம், தாமதம் ஆகியவற்றை கடந்த ஒரு வழியாக இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
கமலின் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் இந்தியன் 2 தான். இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில் படத்திற்கான டப்பிங் பேசும் வேலைகளையும் கமல் செய்து வருகிறார். சமீபத்தில் தான் கமல் தனது போஷன் டப்பிங்கை முடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் சித்தார்த் இந்தியன் 2 படத்திற்காக டப்பிங் பேசி வருகிறார்.
இந்த மாத இறுதியுடன் ஷூட்டிங்கை முடித்து விட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 2024 ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தியன் 2 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான வேலைகளை மும்முரமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் தகவலின் படி இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னை விமான நிலையத்தில் நடந்து வருகிறது. இதற்காக ரூ.1.24 கோடி பணம் செலுத்தி விமான நிலையத்தின் முன்பகுதியில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் அனுமதி பெற்ற இடங்களை தாண்டி, விமான நிலையத்திற்குள் வேறு சில இடங்களிலும் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இதனால் கடுப்பான அதிகாரிகள் ஷூட்டிங்கை பாதியில் நிறுத்தி விட்டார்களாம். இதனால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் படக்குழு தவித்து வருகிறது.
இந்தியன் 2 படத்திற்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருப்பதால், படத்தின் ஷூட்டிங் ஏதாவது ஒரு காரணத்தால் தடைபட்டு வருவதால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனால் ஷூட்டிங்கை முடிக்க இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம் என்பதால் ரசிகர்கள், ஷூட்டிங்கை எப்போ தான்ப்பா முடிப்பீங்க என கேட்டு வருகின்றனர்.
இந்தியன் "தாத்தா" லேட்டா வந்தாலும்.. "கெத்தா" வருவார்னு நம்புவோம்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}