ட்விட்டருக்கு போட்டியாக வந்த திரெட்ஸ்... 7 மணி நேரத்தில் 1 கோடி பயனாளர்கள்!

Jul 06, 2023,04:55 PM IST
டெல்லி :  மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள திரெட்ஸ் சமூக வலைதளம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எலன் மஸ்கின் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் அதிரடியாக அடுத்தடுத்து பல மாற்றங்களை கொண்டு வந்தார். ப்ளூ டிக் அகற்றம், பணம் செலுத்துபவர்களுக்கே  ப்ளூ டிக் என்பது போன்ற பல மாற்றங்களை கொண்டு வந்தார். இதனால் அடுத்து என்ன அறிவிப்பை கொண்டு வருவாரோ என ட்விட்டர் பயனாளர்கள் திக் திக் என இருந்து வந்தனர்.



இந்நிலையில் ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா, திரெட்ஸ் (Threads) என்ற புதிய தளத்தை உருவாக்கி உள்ளது. இதை மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் இன்று (ஜூலை 06) அறிமுகம் செய்து வைத்தார். இந்த புதிய ஆப்பை அவர் அறிமுகம் செய்த முதல் ஒரு மணி நேரத்தில் 2 மில்லியன் பேரும், 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பேரும் login செய்துள்ளனர். 

இன்ஸ்டாகிராம் கணக்கு இருப்பவர்கள் மட்டுமே இந்த புதிய தளமான திரெட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும். இது பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ட்விட்டர் தளம் செய்தி அடிப்படையிலானது. ஆனால் இன்ஸ்டாகிராம் படங்கள் மற்றும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டவை. இது எப்படி ட்விட்டருக்கு மாற்றாக அமைய முடியும் என பயனாளர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது பொது விவாத தளமாக செயல்படும். ஆனால் இதன் பயன்களை முழுவதுமாக புரிந்து கொள்ள பயனாளர்களுக்கு சிறிது காலம் ஆகும் என மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார். அதே சமயம் இது புதிய அனுபவத்தை தரும் என்றும், தற்போது இந்த ஆப் பிளே ஸ்டோர் ஆப்பில் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்