எலான் மஸ்க்கின் "வியூ கட்டுப்பாடு".. டிவிட்டரை நடத்துவது கஷ்டம் பாஸ்.. இணை நிறுவனர் புலம்பல்!

Jul 02, 2023,01:30 PM IST
கலிபோர்னியா: டிவீட்டுகளைப் பார்ப்பதற்கு எலான் மஸ்க் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறித்து டிவிட்டரை நிறுவயவர்களில் ஒருவரும், முன்னாள் தலைமை செயலதிகாரியுமான ஜேக் டோர்சி கருத்து தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் பயனாளர்களுக்கு தினசரி ஏதாவது ஒரு டென்ஷனைக் கொடுப்பதே எலான் மஸ்க்கின் வேலையாகப் போய் விட்டது. முன்பு ப்ளூ டிக்கை காசாக்கி கடுப்படித்தார். இப்போது டிவீட்களைப் படிப்பதற்கும் கிடுக்கிப்பிடி போட்டு விட்டார் மஸ்க்.




அதாவது வெரிபைட் அக்கவுன்ட் வைத்திருப்போர் தினசரி 6000 டிவீட்டுகளை படிக்க முடியும். வெரிபைட் கணக்கு இல்லாதவர்கள் வெறும் 600 டிவீட்டுகளை மட்டுமே படிக்க பார்க்க முடியும். இந்த கட்டுப்பாடு டிவிட்டர் பயனாளர்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்க் வந்ததே டிவிட்டரை அழிக்கத்தானா என்று பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் டிவிட்டரின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை செயலதிகாரியுமான ஜேக் டோர்சி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், டிவிட்டரை நடத்துவது கடினமானது.   இருப்பினும் தற்போதைய டீம் தன்னால் முடிந்தவரை சிறப்பாக செய்து வருகிறது. 

ஒரு முடிவை விமர்சிப்பது எளிது. ஆனால் டிவிட்டர் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்பதே கடைசி நோக்கமாகுமா.  டிவிட்டர் நிச்சயம் சிறப்பாக இருக்கும்.. எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் ஜேக்.




டிவிட்டரில் தற்போது நடந்து வரும் மாற்றங்கள் எல்லோருக்கும் நலம் பயக்கும் என்பதும் ஜேக்கின் கருத்தாக உள்ளது. இணையதளத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது, அதை்ததான் தற்போது டிவிட்டர் செய்து கொண்டிருப்பதாகவும் ஜேக் கூறுகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து டிவிட்டரை வாங்கினார்  எலான் மஸ்க் என்பது நினைவிருக்கலாம். அன்று முதல் பல்வேறு மாற்றங்களை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.  அதுவரை ப்ளூடிக் இலவசமாக இருந்தது. அதை தற்போது மாதம் 8  டாலர் என்று கட்டணம் வசூலித்து டிவிட்டருக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்