சென்னை: பிரபல நடிகரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, தனது தோழியுடன் இருப்பது போன்ற போட்டகளை டிவிட்டரில் சிலர் கடந்த சில நாட்களாக பகிர்ந்து வருகின்றனர்.
இதை தவறு என்று பலரும் கண்டித்தாலும், இதை வேகமாக பரப்பி வருகின்றனர்.
போட்டோவில் இன்பநிதியுடன் இருப்பது அவரின் தோழியா அல்லது காதலியா என்ற விவாதம் வேறு சோஷியல் மீடியாவில் அனல் பறக்க நடந்து வருகிறது. அது உண்மையான போட்டோவா அல்லது போட்டோஷாப்பா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் இன்பநிதியின் தாயார் கிருத்திகா உதவியநிதி டிவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், லவ் பண்ண பயப்படக் கூடாது. அதை வெளிப்படுத்த வேண்டும். இயற்கையின் கருணையால் நடக்கும் நடக்கும் விஷயங்களை புரிந்து கொண்டு, அதன் வழியிலேயே முழுமையாக அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கிருத்திகா உதயநிதியின் இந்த ட்வீட்டிற்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகள் குவிந்து வருகின்றன.
இந்த ட்வீட் அசரவைத்து விட்டது. உங்கள் மீதான மரியாதையும், அன்பும் அதிகமாகி விட்டது. நல்ல மனைவி, நல்ல தாய் என பாராட்டி வருகின்றனர். இனி எந்த போட்டோவை யார் பகிர்ந்தால் என்ன என பலரும் கிருத்திகாவின் ட்விட்டிற்கு மட்டுமல்ல இன்பநிதிக்கும் சேர்த்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இன்பநிதியின் போட்டோவை வைத்து அரசியல் பண்ண நிவைத்தவர்களுக்கு தான் கிருத்திகாவின் ட்வீட் செம அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் போல.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}