நான் வர மாட்டேன்... குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை.. ரசிகர்கள் ஷாக்!

Feb 27, 2023,10:11 AM IST
சென்னை : விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. 2019 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பலரின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மூன்று சீசன்கள் நிறைவடைந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.



இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து கோமாளியாக இருந்து வருகிறார் மணிமேகலை. இவரது படபடவென்ற பேச்சுக்கு ஃபேன்ஸ் அதிகம். இதனால் இன்ஸ்டாவில் மணிமேகலை போடும் போஸ்டுகளுக்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவியும்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நானே வருவேன் சுற்றில் தனுஷ் கெட்அப்பில் வந்த போட்டோ ஒன்றை பதிவிட்டு, இனி வர மாட்டேன் என, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் மணிமேகலை. நான்காவது சீசனில் இருந்து பாதியிலேயே இவர் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானே வருவேன் கெட்அப்பில் வந்தது தான் குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன். 2019 ம் ஆண்டு முதல் சீசனில் துவங்கி தொடர்ந்து எனக்கு ஆதரவும், அன்பும் அளித்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றி. எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை, சந்தர்ப்பங்களை என்னால் முடிந்த வரை சரியாக பயன்படுத்தி உங்களை மகிழ்வித்தேன் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகியதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இருந்தாலும் சரியான காரணம் என்ன என்பதை மணிமேகலையே விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மணிமேகலை விலகியதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது பற்றிய டாக் தான் சோஷியல் மீடியாவில் தீவிரமாக போய் கொண்டிருக்கிறது.

நடப்பு குக் வித் கோமாளி பல்வேறு குழப்பங்களுடன் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஓட்டேரி சிவா இந்தத் தொடரை விட்டு விலக்கப்பட்டார். அவரால் பல சர்ச்சைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவரை தொடரை விட்டு நீக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதையெல்லாம் நம்பாதீர்கள். மீண்டும் நான் வருவேன் என்று சிவா வீடியோ போட்டிருந்தார். இந்த நிலையில் புகழ் பெற்ற மணிமேகலையே விலகியிருப்பதால்.. குக் வித் கோமாளியில் சம்திங் ராங் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்