"நீலாம்பரி"யாக மாறிய மார்க் சக்கர்பர்க்.. 11 வருடத்துக்குப் பிறகு.. டிவிட்டருக்கு ரிட்டர்ன்!

Jul 06, 2023,11:09 AM IST
கலிபோர்னியா: படையப்பா படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு எப்படி நீலாம்பரி வீட்டை விட்டு வெளியே வந்தாரோ அதேபோல 11 வருட இடைவளிக்குப் பிறகு டிவிட்டர் பக்கம் வந்துள்ளார் பேஸ்புக் நிறுவரான மார்க் சக்கர்பர்க்.

ஒரு காலத்தில் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இல்லாமல் வாழவே முடியாது என்ற அளவுக்கு  மக்கள் அடிமையாகிக் கிடந்தனர்.. இப்போதும் பலர் அப்படித்தான்.. ஆனால் அதையும் தவிர்த்து இருக்க முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர்..அந்த கேட்டகிரியில் மார்க் சக்கர்பர்க்கும் வருகிறார். கிட்டத்தட்ட 11 வருடங்களாக அவர் டிவிட்டர் பக்கமே வரவில்லை. ஒரு டிவீட்  கூட போடவில்லை.



தற்போது அதற்கு பிரேக் விட்டு மீண்டும் டிவிட்டர் பக்கம் வந்துள்ளார் மார்க். ஒரு மீம் ஒன்றை போட்டு அந்த டிவீட்டை பதிவிட்டுள்ளார். இதற்குக் காரணம் உள்ளது.

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா புதிதாக திரெட்ஸ் என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிவிட்டருக்குப் போட்டியாக கருதப்படுகிறது. இந்த ஆப்பை அறிமுகப்படுத்திய கையோடு இருவர் சண்டை போடுவது போன்ற மீமை டிவீட் செய்து எலான் மஸ்க்கை கலாய்த்துள்ளார் மார்க் சக்கர்பர்க்.  சமீப காலமாக டிவிட்டர் நிறுவனம் மேற்கொண்டு வரும் பல்வேறு மாற்றங்களால் அதன் பயனாளர்கள் பலரும் கடுப்பாகியுள்ளனர்.

ப்ளூ டிக் வேணுமா காசு கொடு.. நீ இவ்வளவு டிவீட்தான் ஒரு நாளைக்குப் பார்க்க முடியும்..  வெரிபைட்னா இவ்வளவு பார்க்கலாம்.. என்று மஸ்க் போட்டு வரும் ரூல்ஸ்களால் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். இந்த எரிச்சலையே முதலீடாக்கும் திட்டத்தில்தான் திரெட்ஸை அறிமுகப்படுத்துகிறார் மார்க் சக்கர்பர்க். டிவிட்டரால் டர் ஆனவர்கள் திரெட்ஸ் பக்கம் திரண்டு வருவார்கள் என்பது அவரது கணக்கு.

பார்க்கலாம்.. மஸ்க் எடுக்கும் ரிஸ்க்கையெல்லாம் மார்க் ரஸ்க் ஆக்கி சாப்பிடுவாரா அல்லது பின்வாங்கி ஓடுவாரா என்பதை!

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்