அவங்களும் மனுஷங்க தானய்யா...  பரினிதி சோப்ராவின் க்யூட் ரொமான்ஸ்.. செம வீடியோ!

May 16, 2023,02:59 PM IST
டில்லி : நடிகை பரினிதி சோப்ரா, ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் ராகவ் சந்தா திருமண நிச்சயதார்த்தத்தின் போது மணமக்கள் இருவரும் அனைவரின் முன்னிலையிலும் க்யூட்டாக ரொமான்ஸ் செய்த வீடியோ இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. இதற்கு வாழ்த்துக்களும் குவிகிறது.

பாலிவுட் பிரபல நடிகையும், நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினருமான பரினிதி சோப்ரா, ஆம்ஆத்மி கட்சி பிரமுகரான ராகவ் சந்தா இருவரும் காதலித்து வருவதாக பல மாதங்களாக வதந்திகள் பரவி வந்தன. ஆனாலும் இது பற்றி அவர்கள் இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இவர்களின் காதலை ட்விட்டர் மற்றும் பேட்டிகளில் உறுதி செய்து வந்தனர். 



பல மாதங்களாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் தங்களின் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் பரினிதி சோப்ரா. இதையடுத்து கடந்த வாரம் இவர்களின் நிச்சயதார்த்தம் மிக பிரம்மாண்டமாக டில்லியில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவர்களின் நிச்சயதார்த்த போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவிய, வாழ்த்துக்களை அள்ளியது.

மற்ற வீடியோக்களை விட நிச்சயதார்த்தத்தின் போது பரினிதி சோப்ராவும், ராகவ் சந்தாவும் செய்த க்யூட் ரொமான்டிக் வீடியோ தான் செம வைரலாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த வீட���யோவில், அடக்கமாக கையை கட்டியபடி நிற்கும் ராகவ் சந்தின் கைகளை கோர்த்த படி நிற்கும் பரினிதி சோப்ரா, திடீரென நிகழ்ச்சியில் ஒலித்துக் கொண்டிருந்த இந்தி பாடலை, தனது வருங்கால கணவரின் கையை பிடித்த படி பாடினார். ராகவின் கையை படித்த படி லேசான நடன அசைவுகளுடன், முகத்தில் க்யூட்டான லவ் எக்ஸ்பிரசனுடன் பாடினார் பரினிதி சோப்ரா.

இதை ரசித்து சிரித்த ராகவ், பரினிதியின் கன்னத்தில் முத்தமிட்டார். அவரை கட்டிப் பிடித்தபடி தொடர்ந்து பாடலை பாடினார் பரினிதி சோப்ரா. சிறிது நேரத்தில் இருவரும் சேர்ந்தே அந்த பாடலை பாட, சுற்றி இருந்த அனைவரும் கைதட்டி வரவேற்றனர். இந்த க்யூட்டான ரொமான்டிக் வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. 

இந்த வீடியோவை பார்த்து விட்டு அந்த க்யூட்டான ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், பிரபலங்கள் என்றாலும் அவங்களும் மனுஷங்க தானே? காதல் உணர்வு அனைவருக்கும் பொதுவானது. அவர்களின் மனதில் உள்ள காதல் முகத்தில், அதுவும் பரினிதி சோப்ராவின் முகத்தில் எவ்வளவு அழகாக தெரிகிறது என கமெண்ட் செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

நேரம் கடந்தாச்சு.. இன்னும் பிரச்சாரத்தை துவக்கவில்லை.. என்ன செய்ய போகிறார் விஜய்?

news

விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்

news

விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!

news

கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

news

திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!

news

நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

news

அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்