புட்டபொம்மா பாடலுக்கு செம ஆட்டம் போட்ட விஜய்...வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளும் நடிகை

Jun 24, 2023,11:50 AM IST
சென்னை : நடிகர் விஜய் தனது 48 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை சோஷியல் மீடியா மூலம் பகிர்ந்தனர். 

நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் விஜய்யுடன் தாங்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். 



இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ட்ரா பக்கத்தில் விஜய்யுடன் நடனமாடிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் விஜய், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், நடிகை பூஜை ஹெக்டே மற்றும் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் இணைந்து பிரபலமான புட்டபொம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளனர். பீஸ்ட் பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. பூஜா இந்த வீடியோவை பகிர்ந்த சில நிமிடங்களிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதை பார்த்து லைக் செய்துள்ளனர்.

பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். ஷூட்டிற்கு நடுவே பிரேக் டைமில் ஜாலியாக புட்டப்பொம்மா பாடல் ஸ்டெப்பை பூஜா போட, விஜய்யுடன் சேர்ந்து ஆடி உள்ளார். செம ஹிட்டான புட்டபொம்மா பாடல், அல்லு அர்ஜூன் உடன் பூஜா ஹெக்டே இணைந்த நடித்த ஆல வைகுண்டபுரமுலு படத்தில் இடம்பிடித்தது. 

பீஸ்ட் படம் ரிலீசாகி ஓராண்டிற்கு மேல் ஆகியும் இப்படி ஒரு வீடியோவை வெளியிடாமல் பூஜா ரகசியமாக வைத்துள்ளாரே என பலரும் கேட்டு வருகின்றனர். ஆனால் விஜய்யுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து மகிழ்ச்சியாக பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் பூஜா.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்