ரஜினி குடும்பத்திற்கு சோதனை.. மூத்த மகள் வீட்டில் நகை, இளைய மகள் வீட்டில் கார் சாவி திருட்டு

May 10, 2023,11:42 AM IST
சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தின் மகள்களின் வீடுகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது சினிமா உலகை மட்டுமின்றி, ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்த தங்க நகைகள் திருட்டு போன சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. முதலில் 60 சவரன் திருட்டு போனதாக சொல்லப்பட்ட நிலையில், பிறகு நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் நூற்றுக் கணக்கான சவரன் நகைகள், பணம் பல ஆண்டுகளாக திருடப்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் வீட்டில் செய்த இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. 



இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவின் வீட்டில் இருந்து சொகுசு கார் திருடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது காரின் மற்றொரு சாவியை காணவில்லை என தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் செளந்தர்யா புகார் அளித்துள்ளார்.  ஏப்ரல் 24 ம் தேதி வீட்டிலிருந்து தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது காரின் மற்றொரு சாவி பவுச்சுடன் காணாமல் போனதாக செளந்தர்யா தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

தனது ரேஞ்ச் ரோவர் காரின் சாவி தொலைந்து போனதாக செளந்தர்யா அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இருந்தாலும் ரஜினி மகள்களின் வீடுகளில் அடுத்தடுத்து பொருட்கள் காணாமல் போவது பரபரப்பை கிளப்பி உள்ளது. செளந்தர்யா ரஜினிகாந்த், ரஜினி நடித்த கோச்சடையான், சந்திரமுகி படங்களில் கிராஃபிக் பணியாற்றிதுடன், பல படங்களில் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் ஆக., 3ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள Z பிரிவு y பிரிவு ... மறைமுகமாக தவெகவை தாக்கிய சீமான்!

news

ஆபரேஷன் மகாதேவ் அதிரடி.. காஷ்மீரில் ராணுவ வேட்டையில்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

news

காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

news

திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை

news

BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

60 வயதிலும் 20 வயது இளைஞர் போல இருக்கணுமா.. அப்படீன்னா இதை பாலோ பண்ணுங்க!

news

துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசர் வெளியீடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்