மாகாபாவுக்கு டாட்டா.. விஜய் டிவியில் தொகுப்பாளராக என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்!

Feb 23, 2023,02:54 PM IST
சென்னை : விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல சீசன்களை தாண்டி தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.



விஜய்யின் பல பிரபலமான ஷோக்களை தொகுத்து வழங்குவதை போல், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் பல ஆண்டுகளாக பிரியங்காவும், மாகாபா ஆனந்த்தும் தான் தொகுத்து வழங்கி வருகின்றனர். இவர்களின் காமெடி காம்போவும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். பிரியங்காவின் கலகலப்பான பேச்சு, அதற்கு அவ்வப் போது கவுன்ட்டர் கொடுத்து, கலாய்க்கும் மாகாபா.,வின் அலட்டல் இல்லாத பேச்சு ஆகியன பலரையும் கவர்ந்துள்ளது.



கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் டிவி.,யில் முக்கியமான டாப் ஷோக்கள், விருது விழாக்கள் போன்றவற்றை மாகாபா- டிடி, மாகாபா - பிரியங்கா காம்போ தான் தொகுத்து வழங்கி வருகிறது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து மாகாபா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மாகாபாவிற்கு பதிலாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பிக்பாஸ் பிரபலம் வேறு யாறுமல்ல ரியோ ராஜ் தான். சன் மியூசிக்கில் ஆர்ஜே.,வாக பணியாற்றிய ரியோ, விஜய் டிவியில் 2011 ம் ஆண்டில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீசன் 3 சீரியலில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

2019 ல் சிவகார்த்திகேயன் தயாரித்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் சினிமாவிலும் ஹீரோ ஆனார். பிறகு சின்னத்திரை நடிகையான ஸ்ருதியை ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2020 ல் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தை வென்றார். அதன் மூலம் கிடைத்த புகழால், பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது.

தொகுப்பாளராக இருந்து, நடிகரான ரியோ ராஜ் தற்போது மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக என்ட்ரி கொடுக்க உள்ளார். ரியோ- பிரியங்காவின் காம்போ எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

காவிரி சம்பந்தமாக மத்திய அரசை சந்திக்க தவெக அரசு முன்வருமா?.. கனிமொழி கேள்வி

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

news

Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!

news

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்