"தாடா" வுக்கு போன் செய்து வாழ்த்திய வாத்தி.. .நீங்க வேற லெவல் தனுஷ்!

Feb 23, 2023,03:38 PM IST
சென்னை : தாடா படம் பார்த்து விட்டு நடிகர் கவினுக்கு போன் செய்து தனது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ். கவின் பகிர்ந்த இந்த தகவலால் அவருக்கு வாழ்த்துக்களும், தனுஷிற்கு பாராட்டும் குவிந்து வருகிறது.



சின்னத்திரை நடிகராக அறிமுகமாகி, பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் லிஃப்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அசத்தலான நடிப்பால் அனைவரின் பாராட்டையும் பெற்றார். திரை பிரபலங்களும், விஜய் டிவி பிரபலங்களும் இவரை கொண்டாட துவங்கினர்.




அதற்கு பிறகு ஆகாசவாணி போன்ற வெப் சீரிஸ்களில் நடித்த கவின், லேட்டஸ்டாக தாடா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் ரிலீசாகி பாசிடிவ்வாக விமர்சனங்களையும், ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது. புதுமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கிய இந்த படத்தில் கவின், அபர்ணா தாஸ், கே.பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சிங்கிள் பேரன்டாக இருக்கும் ஒரு இளைஞர், ஒரு குழந்தையை எப்படி வளர்க்கிறார் என்பது தான் படத்தின் கதை. இதை அனைவரும் ரசிக்கும் படி படமாக்கி, வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர். இந்த படத்தை பார்த்து விட்டு, கவினுக்கு போன் செய்து பாராட்டி உள்ளார் தனுஷ். இந்த சந்தோஷத்தை ட்விட்டரில் தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் கவின்.

கவின் தனது ட்விட்டர் பதிவில், "ஹாய் கவின், நான் தனுஷ் பேசுறேன்"... அந்த சில நொடிகளை உண்மை தானா என என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை. அந்த பிளாஷ் என் மனதை இப்போதும் நீங்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் அது பற்றி இப்போது நான் டைப் செய்து கொண்டிருப்பது தான். தாடா படம் பார்த்து விட்டு, தனுஷ் சார் எனக்கு கால் செய்த அந்த நிமிடம் மறக்க முடியாத அற்புதமான தருணம்.

நான் உங்களது எல்லா படங்களையும் பார்த்துள்ளேன். நான் உங்களின் படங்கள் அனைத்தையும் திரையில் பார்த்த போது, என்ன ஒரு அற்புதமான நடிப்பு திறமை என வியந்துள்ளேன். ஆனால் இன்று நீங்களே எனக்கு கால் செய்து பேசிய போது என்னால் நன்றியை தவிர வேறு எதுவும் பேச முடியவில்லை. உங்கள் மீது மிகப் பெரிய மரியாதை உள்ளது. வளரும் நடிகர்களையம் அழைத்து பேசி, பாராட்டும் உங்கள் குணம் பாராட்டுக்குரியது.

வாத்தி படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் சார். எப்போதும் உங்களிடம் இருந்து வரும் நல்ல சினிமாக்களை பார்க்க ஆர்வமாக உள்ளேன் சார். இவ்வாறு கவின் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்

news

பசும்பொன்னில் ஒன்றாக சேரும் ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன்... அடுத்து என்ன?

news

6 வருடங்களுக்குப் பிறகு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் face to face meeting!

news

அரபிக் கடலில் மெல்ல மெல்ல நகரும் காற்றழுத்தம்.. புனேவுக்கு கன மழை எச்சரிக்கை

news

உன்னை கண்டு மெய் மறந்தேன்..... உலகமே நீதான் என்றுணர்ந்தேன்!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில்.. இந்த முறையும் போட்டியிட மாட்டார்.. முதல்வர் நிதீஷ் குமார்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்