7வது முறையாக "டாடி" ஆனார் ராபர்ட் டி நீரோ.. 79 வயதில்!

May 10, 2023,04:57 PM IST
நியூயார்க் : ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ராபர்ட் டி நிரோ, தனது 79வது வயதில் ஏழாவது குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். இதனை அவரே அதிகாரப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் ராபர்ட் டி நீரோ, ரேஜிங் புல், ஹரிஷ்மேன், டாக்ஸி டிரைவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இரண்டு முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற இவர் அபவுட் மை ஃபாதர், கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இவர் நடித்த அபவுட் மை ஃபாதர் படம் தொடர்பாக பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த ராபர்ட் டி நிரோ, சமீபத்தில் தனக்கு ஏழாவது குழந்தை பிறந்ததை அறிவித்தார். ஆனால் அந்த பேட்டியில் குழந்தையின் பெயர், குழந்தையின் தாய் குறித்த எந்த விபரத்தையும் அவர் வெளியிடவில்லை. ராபர்ட்டிற்கு ஏற்கனவே ஆறு பிள்ளைகள் உள்ளனர்.



ராபர்ட் டி நிரோவின் மூத்த மகள் ட்ரேனாவுக்கு 51 வயது ஆகிறது. ராபர்ட் டி நிரோ நடித்துள்ள அபவுட் மை ஃபாதர் படம் மே 26 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தனது பேட்டியில் அவர், குழந்தைகள் பிறப்பதை சட்டச் வகுத்து கட்டுப்படுத்துவதை சட்டம் போட்டு கட்டுப்படுத்த முடியாது. அதை நான் மட்டுமல்ல எந்த பெற்றோரும் விரும்ப மாட்டார்கள். ஏழு குழந்தைகளுக்கு தந்தையானாலும் மேனாம் குழந்தை பெற்றுக் கொள்வதை நான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ராபர்ட், டியான்னே அபோட் என்பவரை 1976 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் பிறந்த நிலையில் 1988 ம் ஆண்டு முதல் மனைவியை பிரிந்தார் ராபர்ட்.  இதைத் தொடர்ந்து மாடல் டூக்கி ஸ்மித் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்தனர். அதன் பிறகு நீரோ கிரேஸ் ஹைடவருடன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தாத்தா (கவிதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்