எச். ராஜா வரட்டும்.. என் பொண்டாட்டி மாட்டுக்கறி சமைப்பாங்க சாப்பிடட்டும்.. சீமான் நெத்தியடி!

Jul 08, 2023,02:00 PM IST
புதுக்கோட்டை: எச். ராஜா தன்னுடன் என்னை வருமாறு கூப்பிடுகிறார். அவருக்கு எனது ஒரே பதில்..வாய்ப்பில்லை ராஜா. அவரை நான் பாசமாக என்னோட வீட்டுக்குக் கூப்பிடுகிறேன்.. என்னோட பொண்டாட்டி நல்லா மாட்டுக்கறி சமைப்பாங்க. வந்து சாப்பிட்டட்டும் என்று அதிரடி காட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சமீபத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா கூறுகையில் தமிழ் சித்தாந்தம் போன்ற பிரிவினைவாத சித்தாந்தத்தை விட்டு விட்டு சீமான் எங்களுடன் இணைய வேண்டும். அவர் எனது நண்பர்தான். எங்களுடன் அவர் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.



இதுகுறித்து இன்று புதுக்கோட்டை வந்த சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டனர். மேலும், சீமானின் தமிழ் தேசிய சித்தாந்தம் தோற்றுப் போய் விட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாளவன் கூறியது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு சீமான் பதிலளிக்கையில், எச். ராஜாவுக்கு என்னோட ஒரே பதில்"வாய்ப்பில்லை ராஜா"அண்ணன் திருமாளவனுக்கு, பொறுத்திருந்து பாருங்கள்.நான் தோற்று விட்டேன் என்று சொல்லாம். ஆனால் யாரும் ஜெயிக்க முடியாது என்று சொல்லும் உரிமை அண்ணனுக்கு இல்லை. முதன் முதலில் நான் அரசியல் கற்றுக் கொண்டது அவரிடம்தான். எப்பவுமே பயிற்சி கொடுத்த ஆசிரியர் ஓடி ஜெயிக்க முடியாது. கற்றுக் கொண்ட மாணவன்தான் வெல்வான்.

நான்தான் தோத்துப் போயிட்டேன்ல.. பிறகென்ன விட்ருங்க.  தமிழ் தேசிய சித்தாந்தம் எத்தனை காலமா இங்கே இருக்கு.. இப்பத்தானே வந்திருக்கு. பொறுத்துப் பாருங்க. நான் தோத்துட்டுப் போறேன், உங்களுக்கென்ன கவலை. தோத்துப் போன தத்துவம் குறித்து நீங்க பேச என்ன இருக்க என்றார் சீமான்.

எச். ராஜா உங்களைப் பாசமாக கூப்பிடுகிறாரே என்று செய்தியாளர்கள் மீண்டும் கேட்டபோது, நானும் பாசமா அவரை வீட்டுக்கு வருமாறு கூப்பிடுறேன். என் பொண்டாட்டி நல்லா மாட்டுக்கறி சமைப்பா. வந்து சாப்பிட்டுட்டு போகட்டும் என்றார் சீமான் சிரித்தபடி. தொடர்ந்து செய்தியாளர்கள், இத்தனை காலமாக  உங்களை விமர்சித்து விட்டு இப்போது திரும்பத் திரும்ப அழைப்பது ஏன் என்று கேட்டபோது "நான் வளர்கிறேனே மம்மி" என்று கூறி விட்டு வெடிச் சிரிப்பு சிரித்தார் சீமான்.

சீமானை தேர்தலில் வேண்டுமானால் ஈசியாக ஜெயித்து விடலாம்.. ஆனால் பேச்சில்.. ம்ஹூம்.. ஜெயிக்கவே முடியாது போங்க!

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்