"எழுதுங்கள் என் கல்லறையில்"... இரும்பால் அடிக்கும் இன்னொரு குரல்.. இன்னும் கிடைக்கலியே!

Jun 10, 2023,04:57 PM IST
- பிரேமா சுந்தரம்

சில முகங்களை போன்று சில குரல்களும் நம் நினைவில் நீங்கா பதிவு பெற்றிருக்கும்.. அப்படிப்பட்ட நான் கடந்து வந்த ஏன் நீங்களும் கடந்து வந்த சில குரல்களைப் பற்றிதான் எழுத விழைகிறேன்.. 

"அம்மா.. எப்படி சிவாஜி கணேசன் இவ்வளோ அழகா பாடுறாங்க??" என கேட்ட எனக்கு கிடைத்த பதில் .. பாடுவது டி.எம்.சௌந்தரராஜன் என்ற பாடகர்.. சிவாஜி தாத்தா வாய்தான் அசைக்கிறார்.. "இன்றும் அம்மம்மா தம்பி உன்னை நம்பி அவன் என்னை வளர்த்தான்" என்ற ராஜபார்ட் ரங்கதுரை பாட்டுக்கும் "எழுதுங்கள் என் கல்லறையில் இவள் இரக்கமில்லாதவள் என்று; பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரனென்று" என்ற வசந்தமாளிகை பாட்டுக்கும் ஒலிக்கும் கணீர் குரலை இரும்பால் அடிக்கும் இன்னொரு குரல் கிடைக்கப்பெறவில்லை..!



பி.சுசீலா, ஜானகி, சித்ரா போன்ற பாடகிகள் நமக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்.. அதே மாதிரியான ஒரு வரம் கிடைக்கவும் பெற்று அதை முழுமையும் அனுபவிப்பதற்குள் கடவுள் பறித்துக் கொண்ட குரல்தான் சொர்ணலதா.. "மாலையில் யாரோ மனதோடு பேச" என நம் மனதோடு பேசியவர்.. "எந்தன் சோகம் சொல்வதற்கு இது போல் மருந்து வேறில்லையே" என்று அலைபாயுதே பாடலால் நம் சோகத்திற்கு குரலால் மருந்திட்டவர்.. !

"ஒரு கூட்டுக் கிளியாக ஒரு கூட்டுக் குயிலாக  பாடு பண்பாடு" என படிக்காதவனில் பாடிய மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு முதல் மரியாதை திரைப்படமே முழுமுதற் சான்று..!

"கோதாவரி அடியேய் கோதாவரி" என ஒரு விதமான மங்கிய குரலில் சம்சாரம் அது மின்சாரம் இல் குடும்பக் காவியம் படைத்த திரு.விசு அவர்களின் குரலைக் கண்ணை மூடி கேட்டாலும் கூட கண்டு பிடித்து விடலாம்..



அரிய பல சாதனைகள் புரிந்த நம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் அவர்களின் மெல்லிய குரலை நம் யாராலும் மறக்க முடியாது..

"தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் நான் கட்டு மரமாகத்தான் மிதப்பேன்" என்ற கலைஞரின் குரலும் ஒரு தனிவகை தான்..

லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இலங்கை வானொலி நிகழ்ச்சியாளர் திரு.சாகுல் ஹமீது அவர்கள் பேசும் போது ஒரு ராஜகம்பீரம் வெளிப்படும்.

"வணக்கம் இன்றைய தலைப்புச் செய்திகள்" என செய்தி கூறும் நிர்மலா பெரியசாமி அவர்கள் எங்கள் குழந்தைப் பருவத்து குதூகலக் குரல்.. 

முகமறியா குரல்கள் பல நம் விழிகளை விரிய வைத்த காலம் உண்டு.. "நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை" என்ற குரல்,  "பொம்மாயி" என்ற அருந்ததி திரைப்படக் குரல்.. "எனக்கொரு உண்மை தெரியனும் சாமி" என்ற முதல் மரியாதை குரல்..  "and the nominees are" என அனைத்து தமிழ் திரைப்பட விருது விழாக்களிலும் ஒலிக்கின்ற ஒரு குரல்..

"ஏந்திரு அஞ்சலி ஏந்திரு" என அஞ்சலி திரைப்படத்தில் ஒரு குழந்தை அழைக்கும் குரல் இன்றளவும் மனதில் அதே வலியோடு ஒலிக்கின்றது..



சூரியன் பண்பலையின் "கிட்டு மாமா சுசி மாமி"இன் குரலும் காலைப் பொழுதை அழகாக்கிய குரல்கள்..

"அய்யோ நான் கொடுத்த பாலெல்லாம் இப்படி இரத்தமாபோகுதே" என தேவர்மகனில் கதறி அழும் கிழவியின் குரலுக்கு மனம் குமுறாத இதயங்கள் இருக்க முடியாது..

இப்படி எத்தனையோ குரல்கள் நம்மோடு பயணித்திருக்கின்றன நம்மை அறியாமல்.. சில குரல்கள் உற்சாகமூட்டும்.. சில குரல்கள் எரிச்சலூட்டும்.. இனி வாழ்வில் இந்த குரலைத் திரும்ப கேட்கவே கூடாது என சில குரலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்போம்.. மீண்டும் ஒரு முறையாவது அந்த குரலைக் கேட்டு விட மாட்டோமா என சில குரலுக்காக ஏங்கிக் கொண்டிருப்போம்.. குரலுக்கு பேதமில்லை என்னைப் பொறுத்தவரை.. அக்குரல் குயில் போன்று இருந்தாலும் சரி அல்லது காகம் கரைவது போன்று இருந்தாலும் சரி.. அக்குரல் கடத்தும் இன்பம், அக்குரல் கடத்தும் வலி, அக்குரல் கடத்தும் தவிப்பு, அக்குரல் கடத்தும் பயம், அக்குரல் கடத்தும் ஆளுமை, இப்படியாக உணர்வுகளைக் கடத்தி உள்ளத்தோடு பேசும் அனைத்து குரல்களுக்கும் முகமிருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றென்றும் நம் மனதில் கும்மாளமிடும் அனைத்து குரல்களுக்கும் ஒரு நினைவுகூறல் இப்பதிவின் மூலமாக..

சமீபத்திய செய்திகள்

news

May 1: உலக உழைப்பாளர் தினம்.. முயற்சியே வெல்லும்!

news

Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!

news

RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

news

ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)

news

May Day: தொழிலாளர் தினம்.. உழைப்பில்லாமல் கிடைப்பது நிலைத்திருப்பது இல்லை!

news

Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்