சென்னை: கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கப் போவதாக ஒரு செய்தி உலா வருகிறது.
கமல்ஹாசன் - ஸ்ரீதேவி இணை குறித்து தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது.. அந்த ஜோடி கொடுத்த சூப்பர் ஹிட் படங்களை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்கவும் முடியாது. தமிழ் சினிமா கண்ட பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் ஜோடிகளில் முதல் மூன்று இடத்தில் நிச்சயம் கமல் -ஸ்ரீதேவி இருப்பார்கள். அந்த அளவுக்கு இருவரும் இணைந்து கலக்கிய காலம் அது.
தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிரபலமாக வலம் வந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டுக்குப் போய் விட்டார். அங்கு இந்தியிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்து அமிதாப்பச்சனின் ராசியான ஹீரோயினாக மாறிப் போனவர். இந்தியா முழுவதும் ஸ்ரீதேவியின் புகழ் பரவிய காலம் அது.
கடைசிக்காலத்தில் தமிழில் புலி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் நடிக்கப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்தியில்தான் பெரும்பாலும் நடித்து வருகிறார் ஜான்வி. சமீபத்தில் அவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் நடிக்க ஒரு படத்தில் (படம் பெயர் தேவாரா) புக் ஆகியுள்ளார்.
இந்தப் படத்தை முடித்த பின்னர் அவர் தமிழில் அறிமுகமாகவுள்ளதாக சொல்கிறார்கள். அவர் நடிக்கப் போகும் தமிழ்ப் படத்தை நிச்சயம் அவரது அப்பா போனி கபூர் தயாரிக்கப் போவதில்லை. மாறாக, கமல்ஹாசன்தான் தயாரிக்கப் போகிறாராம். விக்னேஷ் சிவன்தான் இப்படத்தின் இயக்குநர் என்று சொல்கிறார்கள். நாயகன் யார் தெரியுமா.. லவ் டுடே, கோமாளி படங்களை இயக்கியவரும், லவ் டுடே படத்தின் நாயகனுமான பிரதீப் ரங்கநாதன்தானாம்.
இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் நிச்சயம் இது வித்தியாசமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பார்க்கலாம்.. என்ன நடக்கும் என்பதை.
செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!
பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி
125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்
சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்
இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!
திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு
{{comments.comment}}