டெல்லி: டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நாளில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. 60 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரே நாளில், டெல்லியிலும், மும்பையிலும் பருவ மழை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தென் மேற்குப் பருவ மழை ஒவ்வொரு பகுதியாக பெய்ய ஆரம்பித்துள்ளது. கேரளாவில் ஆரம்பித்த பருவ மழை தற்போது டெல்லியிலும், மும்பையிலும் தொடங்கியுள்ளது. இரு நகரங்களிலும் ஒரே நாளில் மழை தொடங்கியதுதான் விசேஷமே.
இதற்கு முன்பு 60 ஆண்டுகளுக்கு முன்புதான் இப்படி ஒரே நாளில் இரு நகரங்களிலும் பருவ மழை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், டெல்லிக்கு 2 நாட்களுக்கு முன்பே மழை வந்துள்ளது. மும்பையைப் பொறுத்தவரை 2 வாரம் லேட்டாக வந்து சேர்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியிலும், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையிலும் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. மகாராஷ்டிரா முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோல மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானாவின் சில பகுதிகள், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்முவின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களில் மேலும் நல்லமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அந்தேரி, மலட், தஹிசார் பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
மகாராஷ்டிராவின் ராய்காட், ரத்தினகிரி ஆகிய பகுதிகளுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. பால்கார், தானே, மும்பை, சிந்துதுர்க் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}