திருப்பதி கோவிலைப் படம் பிடித்த டிரோன் வீடியோ .. தடயவியல் துறையிடம் ஒப்படைப்பு

Jan 21, 2023,03:02 PM IST
திருமலை : உலகிலேயே அதிக வருமானம் பெறும் கோவில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில்.  தினமும் 60,000 க்கும் அதிகமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்யும் இக்கோவிலுக்கு கோடி கணக்கில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட டாப் 10 கோவில்களில் திருப்பதியும் ஒன்று. 



பணக்கார தெய்வம் என பக்தர்களால் கொண்டாடப்படும் ஏழுமலையானை தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பலத்த பாதுகாப்பு, பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பக்தர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பல ஆண்டுகளாக திருப்பதியில் நடைமுறையில் உள்ளன.

ஆனாலும் திருப்பதி ஏழுமலையான் என சொல்லி பல வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது. அந்த வரிசையில் கடந்த சில நாட்களாக திருப்பதி கோவிலை ட்ரோன் ஷாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வைரலாகி வந்தது.

ஆனால் இந்த வீடியோ ட்ரோன் கேமிராவில் எடுக்கப்பட்டது என சொல்லப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது. திருமலை முழுவதும் ஹைஃபை விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பின் கழுகு பார்வை கண்காணிப்பில் உள்ளது. அப்படி இருக்கையில் இந்த வீடியோ டிரோன் கேமிரா மூலம் எடுக்கப்பட்டிருப்பட்டிருப்பது சாத்தியமற்றது என திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பு தலைப்பு அதிகாரி ஸ்ரீ நரசிம்ம கிஷோர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து கண்டறிவதற்காக இதை தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஒருவேளை டிரோன் கேமிரா மூலம் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் இந்த வீடியோவை எடுத்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!

news

2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

news

ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

news

டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி

news

அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை

news

குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு

news

ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்

news

விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்

news

True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!

அதிகம் பார்க்கும் செய்திகள்