புத்தாண்டில் புது கார் வாங்கிய ரச்சிதா மகாலட்சுமி.. காரின் விலை ஆத்தாடியோவ்!

Apr 16, 2023,04:24 PM IST
சென்னை : தமிழ் புத்தாண்டு நாளில் புதிய கார் வாங்கிய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த வருகிறார் சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி.

'பிரிவோம் சந்திப்போம்' என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் தான் இவரை பாப்புலர் ஆக்கியது. அதில் மீனாட்சி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 2015 ல் ஆண்டு சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ரச்சிதா, தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். 




கணவருடன் ஏற்பட்ட கருத்து வேருறுபாடு காரணமாக அவரை பிரிந்த ரச்சிதா, தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இவருடன் நெருங்கி பழகியது பெரும் சர்ச்சையானது. ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரச்சிதா. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 91 நாட்கள் வரை இருந்த ரச்சிதா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இருந்ததை விட அதிக போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். லேட்டஸ்டாக, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிவப்பு நிற எம்ஜி ஹெக்டர் கார் வாங்கி உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். 




புதிய ஆண்டு...புதிய துவக்கம் என்ற கேப்ஷனுடன் ரச்சிதா பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ரச்சிதா வாங்கி உள்ள காரின் விலை ரூ.22 லட்சம் ஆகும். புதிய கார் முன்பு பிக்பாஸ் ஷெரினுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியையும் ரச்சிதா பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்