சென்னை : விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவை மட்டுமின்றி கோலிவுட்டையே கலகலக்க வைத்து வருகிறது. ஆனால் இந்த தகவல் உண்மையா, இல்லையா என யாரும் இதுவரை உறுதி செய்யவில்லை.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய், தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பற்றிய தகவல்கள் அவ்வப் போது வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன. லியோ படத்தின் ஷூட்டிங் வேலைகள் கிட்டதட்ட இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. த்ரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன் என டாப் நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் 67 வது படமாக தயாராகி வரும் லியோ படத்தை முடித்து விட்டு, தனது அடுத்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் தயாராக போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்க போவதாக கடந்த இரண்டு நாட்களாக புதிய தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. வெங்கட் பிரபு படம் என்றாலே யுவன்சங்கர் ராஜா தான் இசை. வெங்கட் பிரபு - விஜய் - யுவன் காம்போவில் தளபதி 68 தயாராக உள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.
சிம்பு நடித்த மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும், ரசிகர்களின் மனம் கவர்ந்த டைரக்டர்களில் ஒருவராகி விட்டார் வெங்கட் பிரபு. தற்போது நாக சைதன்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கி உள்ள கஸ்டடி படமும் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் வெங்கட் பிரபு அடுத்து யாரை இயக்க போகிறார் என்ற கேள்வியும், விஜய்யை அடுத்து இயக்க போவது யார் என்ற கேள்வியும் ஒரே சமயத்தில் எழுந்தது. இதனால் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க சரியான ஆள் வெங்கட் பிரபு தான் பலரும் கருத்து கூற துவங்கி விட்டார்கள்.
இணையத்தில் தீயாய் பரவிய இந்த தகவலால் ட்விட்டரில் #Thalapathy68 என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் கலக்கி வருகிறது. கர்நாடக முதல்வர், பாஜக, காங்கிரஸ், ஐபிஎல் என எத்தனையோ விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டாலும் அதற்கு இணையாக தளபதி 68 டாப்பிக்கும் ட்விட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}