ஆர்ஆர்ஆர் பட வில்லன் நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார்

May 23, 2023,10:49 AM IST
டெல்லி : டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக நடித்த ஐரிஸ் நாட்டு நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார். அவருக்கு வயது 58.

ஆர்ஆர்ஆர் படத்தில் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேய ஆளுநர் கேரக்டரில் நடித்த ரே ஸ்டீவன்சனின் நடிப்பு உலக ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வில்லன் கேரக்டராக இருந்தாலும் இவரது கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் மார்வெலின் தோர், பிரபல வெப் சீரிசான வைக்கிங்ஸ் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.



வடக்கு அயர்லாந்தின் லிஸ்பன் நகரில் பிறந்த ஸ்டீவன்சன், 1990 களில் ஐரோப்பிய டிவி தொடர்களிலும், டெலிஃபிலிம்களளிலும் நடித்து சினிமாவிற்குள் என்ட்ரி ஆனார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஸ்டீவன்சன், இத்தாலியில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு ஆர்ஆர்ஆர் படக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

அதில், அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த செய்தி, ரே ஸ்டீவன்சன் மறைவு. ரே ஸ்டீவன்சன் நிம்மதியாக ஓய்வெடுங்கள். நீங்கள் எங்கள் உள்ளங்களில் சர் ஸ்காட் ஆக என்றென்றும் இருப்பீர்கள் என ஆர்ஆர்ஆர் படக்குழு தங்களின் வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளது. 

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு அவர் கடைசியாக நடித்த படம் Accident Man: Hitman's Holiday என்பதாகும். ஹச்பிஓ மற்றும் பிபிசி ரோமில் 22 டிவி தொடர்களில் ஸ்டீவன்சன் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்