"ரோடாய்யா இது".. அட நம்புங்க.. இந்த எம்எல்ஏ இந்தியாவில் தான் இருக்கிறார்!

Apr 01, 2023,02:46 PM IST
லக்னோ : தனது தொகுதியில் தரமான ரோடு போட்டுத்தராத கான்ட்ராக்டரை, எம்எல்ஏ. ஒருவர், கேள்விகளால் துளைத்து எடுக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உத்திர பிரதேசத்தின் காசிப்பூர் தொகுதியின் எம்எல்ஏ.,வாக இருப்பவர் பேடிராம். இவர் சுகல்தேவ் பாரதி சமாஜ் என்ற கட்சியை சேர்ந்தவர். இந்த தொகுதியில் சமீபத்தில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலை தரமானதாக அமைக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் எம்எல்ஏ.,விற்கு பல நாட்களாக புகார் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் சாலையின் தரம் குறித்து நேரில் கண்டறிய,  தொகுதிக்கு நேரில் சென்றார் பேடிராம். 



அங்கு தனது ஷூ காலால் சாலையை தேய்த்தும் சாலை பெயர்த்துக் கொண்டு வந்துள்ளது. இதை பார்த்து கடுப்பான எம்எல்ஏ, அங்கு இருந்த ரோடு கான்ட்ராக்டரை திட்டி தீர்த்து விட்டார். "இதற்கு பெயர் ரோடா? இதில் எப்படி கார் போக முடியும்?"  என கேள்விகளை துளைத்து எடுத்து விட்டார். எம்எல்ஏ ஆய்விற்கு வந்த சமயத்தில் அதிகாரிகள் யாரும் உடன் இருக்கவில்லை. ஆனால் கான்ட்ராக்டரை எம்எல்ஏ லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கி வீடியோ சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

இந்த பகுதியில் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பது பற்றிய வீடியோ வெளி வருவது இது ஒன்று முதல் முறையல்ல. இதற்கு முன்பும் ஒருவர் பொதுப்பணித் துறையில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவதற்காக, அப்போது புதிதாக போடப்பட்டிருந்த சாலையை வெறும் கையால் அசாட்டாக பிடுங்கி எடுத்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். கிட்டத்தட்ட 4.5 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை ரூ.3.8 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

ரோடு கான்ட்ராக்டர் ஒருவரை எம்எல்ஏ ஒருவர் விட்டு விளாசும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், உத்திர பிரதேசத்தில் தேர்தல் ஏதாவது வரப் போகிறதா? ஓட்டு வாங்குவதற்காக நடத்தப்படும் நாடகமா இது? என கேட்டுள்ளனர். இன்னும் சிலர், நிஜமாகவே இப்படி ஒரு எம்எல்ஏ இந்தியாவில் இருக்கிறாரா? நம்ம ஊரு எம்எல்ஏ.,க்கு முதலில் இந்த வீடியோவை அனுப்பி வைக்கனும். நம்ம ஊர்ல ஒரு எம்எல்ஏ., கூட இதுவரை இப்படி பார்க்கவில்லையே என ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்