வெற்றிகளை அள்ளித்தரும் மாசி மாதத்தின் விஜய ஏகாதசி

Feb 16, 2023,12:06 PM IST
சென்னை : ஏகாதசி என்பது மகாவிஷ்ணுவை வழிபட உகந்த நாளாகும். ஏகாதசிக்கு இணையான விரதம் கிடையாது என, ஏகாதசி விரத மகிமை பற்றி சிவ பெருமானே பார்வதி தேவிக்கு விளக்கியதாக புராணங்கள் சொல்கின்றன. ஏகாதசி விரதமானது மாதத்தில் இரண்டு முறை வீதம் வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. 



இந்த ஏகாதசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரும், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான தனிச்சிறப்பும் உண்டு. அந்த வகையில் மாசி மாதத்தில் வரும் இரண்டு ஏகாதசிகளும் நினைத்த காரியங்களை நினைத்த படி நடத்தி தருவதுடன், வெற்றிகளையும் வாரி வழங்கக் கூடிய மகிமை பெற்றன. மகத்துவமான மாசி மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஜெய ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜய ஏகாதசி என்றும் பெயர். 




பொதுவாக ஏகாதசி விரதம் இருப்பது, அஸ்வமேத யாகம் நடத்தியதற்கு இணையான புண்ணிய பலன்களை அள்ளித்தரும் என்பார்கள். அதுவும் வழிபாட்டிற்கே உரிய மாதமான மாசி மாதத்தில் வரும் ஏகாதசி, தெரிந்தும், தெரியாமலும், நாமும், நமது முன்னோர்களும் பல ஜென்மங்களில் செய்த பாவங்களை போக்குவரத்துடன் வெற்றி, செல்வம், வளமான வாழ்க்கை, சகல ஐஸ்வர்யங்கள் ஆகியவற்றை தருவதுடன் வைகுண்ட பதவியை பெற்றுத் தரும்.

இத்தகைய மகிமை வாய்ந்த விஜய ஏகாதசி பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வருகிறது. இன்று அதிகாலை 01.05 மணிக்கு துவங்கி, இரவு 10.59 வரை ஏகாதசி திதி உள்ளது. நாள் முழுவதும் ஏகாதசி திதி உள்ளதால் இதனை சர்வ ஏகாதசி என்கிறோம். இந்த நாளில் நாள் முழுவதும் உபவாசம் இருந்து, பெருமாளின் நாமங்களை சொல்லி வழிபட வேண்டும். பிப்ரவரி 17 ம் தேதி காலை துவாதசி திதியின் போது பாரனை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

news

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி

news

முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?

news

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு

news

மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

அலைபேசி பேச்சு

news

அது ஒரு அழகிய மழைக்காலம்

அதிகம் பார்க்கும் செய்திகள்