முதல் முத்தம் கொடுத்தபோது.. டெட்டால் போட்டு வாயைக் கழுவிய நீனா குப்தா!

Jun 28, 2023,02:24 PM IST
மும்பை: முதல் முறையாக சினிமாவில் முத்தக் காட்சியில் நடித்தபோது வாயை டெட்டால் போட்டுக் கழுவியதாக கூறியுள்ளார் பழம்பெரும் நடிகை நீனா குப்தா.

முத்தம் கொடுத்து முடித்த உடனேயே போய் டெட்டாலை ஊற்றி வாயை நன்றாக கழுவி கொப்பளித்து துப்பியதாக கூறியுள்ளார் நீனா குப்தா.

ஒரு காலத்தில் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நீனா குப்தா. சிறந்த நடிகையாக அறியப்பட்ட அவர் தற்போதும் கூட நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறர்.  இப்போதும்கூட லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் சீரிஸில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில் நீனா குப்தா கொடுத்துள்ள ஒரு பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூறியுள்ளார். அதிலிருந்து சில..

தில்லகி என்ற டிவி தொடரில் முன்பு நடித்தேன். அப்போது அதில் ஒரு முத்தக் காட்சி இருப்பதாக இயக்குநர் என்னிடம் கூறினார். நான் முத்தக் காட்சியில் அதுவரை நடித்ததில்லை. இதனால் எனக்கு படபடப்பாகி விட்டது. இரவெல்லாம் சரியாக தூங்கக் கூட முடியவில்லை.

ஆனால் என்ன செய்வது.. நடிகை என்று வந்து விட்டால் சகதியில் புரள வேண்டும்.. மழையில் நனைய வேண்டும்.. வெயிலில் காய வேண்டும்.. வேறு வழியில்லை இல்லையா.  அதுவரை இந்திய டிவி தொடர் ஒன்றில் முத்தக் காட்சியே இடம் பெற்றதில்லை. அதுதான் முதல் முத்தக் காட்சியும் கூட. லிப் டூ லிப் காட்சி வேற.

திலீப் தவான்தான் எனக்கு ஜோடியாக நடித்தவர்.  எனக்குப் பதட்டமாக இருந்தது. திலீப் தவான் ஜென்டில்மேன்தான்.. ஆனால் அந்த சூழல்தானே முக்கியம். அந்த முத்தக் காட்சி எனக்கு மனசுக்கு ஒப்பவே இல்லை. ஆனால் அதைத் தவிர்க்கவும் முடியவில்லை.

எப்படியோ என்னை சமாதானப்படுத்திக் கொண்டு அந்த முத்தக் காட்சியை முடித்துக் கொடுத்தேன்.  சீன் முடிந்ததும் வேகமாகப் போய் டெட்டாலை எடுத்து வாயைக் கொப்பளித்து துப்பி கழுவினேன். அதன் பிறகுதான் நான் இயல்பு நிலைக்கே வந்தேன்.  ரொம்பக் கஷ்டமாக இருந்தது என்று கூறியுள்ளார் நீனா குப்தா.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்