இந்தியாவுக்கு டெஸ்லா வருமா.. எலான் மஸ்க் சொன்ன சூப்பர் பதில்!

May 25, 2023,10:03 AM IST
சான் பிரான்சிஸ்கோ: இந்தியா தயாராக இருந்தால் அங்கு எனது அடுத்த புதிய தொழிற்சாலையை நிறுவ நான் தயார்தான் என்று கூறியுள்ளார் டெஸ்லா நிறுவன தலைமை செயலதிகாரியான எலான் மஸ்க்.

டிவிட்டர் உரிமையாளராக இருக்கும் எலான் மஸ்க்கின் நிறுவனம்தான் டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம். உலகம் முழுவதும் பிரபலமான டெஸ்லா கார்கள் இதுவரை இந்தியாவில் மட்டும் ஓடாமல் இருக்கிறது. இங்கு தொழிற்சாலை அமைக்க எலான் மஸ்க் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டினாலும் கூட பல்வேறு குளறுபடிகளால் அது நிறைவேறாமலேயே இருக்கிறது.

உலக அளவில் மிகப் பெரிய கார்ச் சந்தையாக இந்தியா விளங்குகிறது. குறிப்பாக சென்னையில் உலகின் முன்னணி கார் நிறுவனங்களின் உற்பத்திக் கூடங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் டெஸ்லா கார் நிறுவனம் தனது அடுத்த புதிய கிளையை தொடங்க ஆயத்தமாகி வருகிறது. எந்த நாட்டில் அது தொடங்கப்படும் என்பது பில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

மஸ்க்கின் புதிய கார் தொழிற்சாலை இந்தியாவில் தொடங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இது பெரும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுவரை அதுகுறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர் மஸ்க்கிடம், இந்தியாவில் கார் தொழிற்சாலை தொடங்க வருமாறு அந்த நாடு அழைத்தால், முன்வந்தால் நீங்கள் டெஸ்லாவை அங்கு தொடங்குவீர்களா என்று கேட்டபோது, கண்டிப்பாக என்று பதிலளித்துள்ளார் மஸ்க்.

வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்காக மஸ்க் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.செய்தியாளர் தொரோல்ட் பார்க்கர் கேட்ட கேள்விக்குத்தான் மேற்கண்டவாறு அவர் பதிலளித்துள்ளார்.

முன்னதாக மெக்சிகோவில் மிகப் பெரிய உற்பத்திக் கூடத்தைத் தொடங்கப் போவதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்லா நிறுவனம் கூறியிருந்தது.  அமெரிக்காவுக்கு அடுத்த மிகப் பெரிய உற்பத்திக் கூடமாக இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

டிவிட்டரை வாங்கிய பிறகு அதில்தான் மஸ்க் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதனால் டெஸ்லா மீதான அவரது  ஈடுபாடு குறைந்து விட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் டிவிட்டருக்கு புதிய தலைமை செயலதிகாரியை தேர்வு செய்த மஸ்க், இனி  டெஸ்லாவில் முழுமையாக கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார்.

டெஸ்லா, டவிட்டர் தவிர ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தையும், இன்னும் பல நிறுவனங்களையும் எலான் மஸ்க் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஒரு பிரமாண்டமான கல்வி நிறுவனத்தையும் அவர் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்