இவங்க கேட்டது வெஜ் பிரியாணி... பட் அவங்களுக்கு கிடைச்சது சிக்கன் பிரியாணி..!

Jul 11, 2023,11:19 AM IST
டெல்லி: வாரணாசியைச் சேர்ந்த ஒரு வெஜிட்டேரியன் குடும்பத்தினர் வெஜிடபிள் பிரியாணிக்கு ஆர்டர் செய்துள்ளனர். ஆனால்  ஹோட்டல்காரர்கள் சிக்கன் பிரியாணியைக் கொடுத்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சொமாட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

இதுதொடர்பாக அஸ்வினி ஸ்ரீவாத்சவா என்பவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில்தான் இந்த காமெடியை அவர் விவரித்துள்ளார். 



இதுகுறித்து அஸ்வினி ஸ்ரீவாத்சவா கூறுகையில், வாரணாசியில் உள்ள இந்தக் குடும்பத்தினர் வெஜிடபிள் பிரியாணிக்காக ஆர்டர் செய்திருந்தனர். சொமாட்டோ மூலம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. பிரியாணியும் வந்தது. ஆனால் அது வெஜிடபிள் பிரியாணி அல்ல.. மாறாக சிக்கன் பிரியாணி அதில் இருந்தது. இந்தக் குடும்பத்தினர் சுத்தமான வெஜிட்டேரியன் . அசைவம் சாப்பிட்டதே இல்லை. அவர்களை அசைவம் சாப்பிட வைத்து விட்டது இந்த ஹோட்டல்.



அவர்கள் பன்னீர் பிரியாணி என்று நினைத்து சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு இது சிக்கன் பிரியாணி என்று கூட தெரியவில்லை. சாப்பிட்ட பிறகுதான் வேறு ஏதோ மாதிரி இருக்கிறதே என்று சந்தேகம் வந்து பார்த்தபோது அது சிக்கன் என்று தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சொமாட்டோ நிறுவனமும், அந்த பிரியாணியை தயாரித்த ஹோட்டலான பெஹரூஸ் ஹோட்டலும் மன்னிப்பு கேட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்