அழகு மயில்!

Jun 09, 2026,11:07 AM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி


பொன் பட்டு பீலி விரித்து 

மென் கழுத்து நீண்டு நிமிர்த்து 


கொஞ்சும் கொண்டை கொஞ்சி ஆர்த்து

விண் சொரியும் சாரலில் மேனி சிலிர்த்து 


ஆனந்தக் கூத்தாடும் அழகு மயில்!

நளினத்தின் இலக்கணம் பெண்மை...


என்ற வரையறையை  மாற்றி அமைத்த ஆண் மயில்..


தேசியப்பறவையான என் தேச மயில் !

தரணி போற்றும் தங்க மயில்!!!


பாவலர் பாடிடும் பட்டு மயில் !

நாவலர் நவில்ந்திடும் நல்ல மயில்!




ஒயிலாய் மயக்கும் ஒய்யார மயில் !

சிலுப்பி சிரிக்கும் சிங்கார மயில்!


கோவிலில் குடியிருக்கும் கோல மயில்!

முருகனின் முன்னிருக்கும் முத்து மயில் !


கவி பாட வரி கொடுத்த என் கானமயில்...

பொன் கான‌மயில்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்