- தேவி
மயங்கிய விழிகள்
உருக ஆரம்பித்தது
உருகிய இதயம்
உறைய ஆரம்பித்தது
உறைந்த நிமிடங்கள்
இளக ஆரம்பித்தது
தெளிந்த பார்வைகள்
தீண்டத் தொடங்கியது
அவளது அனல் பார்வையை....
முகத்தில் தெறித்த முகவரியில்
தெறித்து வந்த இதய ராகம்
கொடுத்த வரியை
இழுத்து பிடித்தேன்
அடுத்த அடியை
மறைத்து உரைத்தேன் இனிது இனிது....

இளமையின் ஊஞ்சலாய்
இனிமையின் தென்றலாய்
இயற்கையின் இலக்கணமாய்
இசையின் ஓவியமாய்
தமிழ் மொழியின் ஆழமாய்
தாலாட்டு பாடும்
தாயின் காவியமாய்
கவிதை கடலை அமுதென பருகும்
கவிதையின் வைரமுத்தாய்
தழைத்து தெளித்து இனித்து
இசைத்து திளைத்து
திகைத்து உரைத்து
உருவம் ஆகின்றாய்
உன் அருகில்
இமயமாக நீ
அதில் ஒளிந்திருக்கும்
புகைமூட்டமாக
நான்......
வடிவமாக நீ
அதில் கலந்திருக்கும்
ஓவியமாக
நான்....
தென்றலாக நீ
அதில் மறைந்திருக்கும்
வாசமாக
நான்.....
வானமாக நீ
அதில் கலைந்திருக்கும்
மேகமாக
நான்.....
மூச்சுக்காற்றாக நீ
அதில் உறைந்திருக்கும்
அனலாக
நான்.....
பௌர்ணமியாக நீ
அதில் மறைந்திருக்கும்
விண்மீனாக
நான்..
வானவில்லின் வண்ணமாக
நீ
அதை எண்ணும் கண்களாக
நான்....
மழைத்துளியின் சிதறலாக
நீ
அதில் நனையும் பனித்துளியாக
நான்
பூக்கும் பூக்களின் வண்ணமாக
நீ
அதில் தேன் எடுக்கும்
வண்டாக
நான்......
பறக்கும் பறவையின் வானமாக
நீ
அதில் மிதக்கும்
காற்றின் வேகமாக
நான்....
பருவம் மாறும் இயற்கையாக
நீ
அதில் திளைத்தும் மலரும்
மனிதனாக
நான்
.jpg)
கூவும் குயிலின் ஓசையாக
நீ
உன்னை ரசித்து பருகும்
காற்றின் அலையாக
நான்....
கடற்கரையின் எல்லையாக
நீ
உன்னில் பிறப்பெடுக்கும்
அலையாக
நான்......
ஆலமரத்தின் வேராக
நீ
உன்னில் ஊஞ்சலாடும்
குழந்தையாக
நான்
மேகங்களை இழுத்து செல்லும் காற்றாக
நீ
உன்னை கரம் பிடிக்கும்
பறவைக் கூட்டமாக
நான்....
காய்ந்து விலகும் மர இலையாக
நீ
உன்னை தாங்கிப் பிடிக்கும்
தாய் மண்ணாக
நான்....
வீட்டின் துளசி மடமாக
நீ
உன்னை அலங்கரிக்கும்
வண்ண மலராக
நான்
காதலின் கருவிழியாக
நீ
உன்னை அலங்கரிக்கும்
காஜலின் புள்ளியாக
நான்...!
முத்தமிடும் இதழின் வண்ணமாக
நீ
உன்னில் தவழும்
பனித்துளியின் கோடுகளாக
நான்
கோடை வெயிலின் மழையாக
நீ
உன்னை கொஞ்சி வரவேற்கும்
அனல் காற்றாக
நான்....
பூந்தொட்டியின் சிரிக்கும் பூக்களாக
நீ
உன்னுள் பிறந்து உதிக்கும்
கனவாக
நான்.....
வீட்டின் முற்றமாக
நீ
உன்னை தினம் தினம் பார்க்கத் துடிக்கும்
தேன் நிலவாக
நான்!
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
தேசத் தந்தை தேசத்தின் விந்தை .. நற்குணம்விற்ற நாட்டுச் சந்தை.. அகிம்சை தலைவன்!
சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....!
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்...யார் அவர்கள்? பரபரக்கும் அரசியல் களம்
விண்ணமுதம்!
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
என்ன சொல்ல...!
பூங்கோதையின் கணக்கு!
அருட்பெரும் ஜோதி.. தனிப்பெரும் கருணை.. ராமலிங்க அடிகளார் வள்ளலாராக மாறிய கதை!
{{comments.comment}}