லிமா: பெருநாட்டில் நடந்த கால் பந்து போட்டியின் போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் ஜோஸ் ஹக்யூ கோ டிலா குரூஸ் மூசா என்ற கால்பந்து வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டின் சில்கா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஜுவன் டெட் பெல்லாவிஸ்டா மற்றும் ஃபேமிலியா சோக்கா ஆகிய இரு அணிகளுக்கு இடையே உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பெல்லாவிஸ்டா அணி முன்னிலை வகித்திருந்தது.

வீரர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு பலமாக மின்னல் வெட்டியது. இதையடுத்து வீரர்கள் பெவிலியன் திரும்ப முடிவு செய்தனர். அப்போது வீரர்கள் மீது மின்னல் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பல வீரர்கள் அப்படியே சரிந்து விழுந்தனர். அதில், 39 வயதான ஜோஸ் ஹ்யூகோ டிலா குரூஸ் மோசா என்ற வீரர் உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே சுருண்டு கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் சக வீரர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து காயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கால்பந்து போட்டியை காண வந்த சிலர் மின்னல் தாக்கி வீரர்கள் சட்டென்று சாய்ந்து விழும் காட்சியை வீடியோவாக பதிவேற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதுடன் பார்ப்போரை நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
மின்னல் தாக்கினால் உயிர் போவது எப்படி.. மின்னல் வெட்டும்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவரான அறிவியல் பேராசிரியர் டிவி வெங்கடேஸ்வரன் சன் செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியின்போது கூறுகையில், மின்னலின் வேகம் ஒரு நொடிக்கு ஒரு லட்சத்து, 56 ஆயிரம் கிலோ மீட்டர் தான். ஆனால் அதன் தடிமன் 1 முதல் 2 அங்குலம் தான் இருக்கும். எனவே ஒருவரை மின்னல் தாக்கும் போது, அவருக்கு அருகில் இருப்பவரையும் தாக்கும் என்ற அவசியம் இல்லை.ஒரு பகுதியில் மின்னலின் தீவிரம் இன்னொரு பகுதியில் வேறு மாதிரியாக இருக்கும்.
மின்னல் வெட்டும்போது திறந்தவெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.உலர்ந்த இடமாக தேடி அமர்வது நல்லது. ஏனெனில் அமரும்போது மின்னல் தரையில் தாக்குவதற்கான வாய்ப்பு சற்று குறைவு. அதேபோல் தண்ணீரோ ஈரமோ இல்லாத தரையில் நிற்க வேண்டும். கூரைக்கு கீழ் நிற்பது மிகவும் பாதுகாப்பானது எனக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
 
                                                                            இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
 
                                                                            எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி
 
                                                                            கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்
 
                                                                            பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
 
                                                                            இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்
 
                                                                            திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி: நயினார் நகேந்திரன் வேதனை!
 
                                                                            தேவர் ஜெயந்தி விழா... முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி: பிரதமர் மோடியின் பதிவு!
 
                                                                            சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்
 
                                                                            கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு: அண்ணாமலை
{{comments.comment}}