அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பையின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தட்டிச் சென்றது.
போட்டியில் வென்றது தென் ஆப்பிரிக்காவாக இருந்தாலும் கூட ரசிகர்கள் மனதை இன்று கவர்ந்தது ஆப்கானிஸ்தான் தான். கடைசி வரை அது போராடிய விதம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி விட்டது.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் குயின்டன் டி காக் (59) மற்றும் ரியான் ரிக்கெல்டன் (61) ஆகியோரின் அதிரடி அரைசதங்கள் அந்த அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவியது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (84 ரன்கள்) சிறப்பான தொடக்கம் தந்தார். கடைசி ஓவரில் கடும் போராட்டத்திற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவருக்குப் போட்டி சென்றது. அதிலும் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டது. அதாவது முதல் சூப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் தலா 17 ரன்கள் எடுத்ததால் மீண்டும் சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது சூப்பர் ஓவருக்குப் போட்டி சென்றது.
இரண்டாவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அஸ்மத்துல்லா வீசிய ஓவரில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 23 ரன்கள் குவித்தனர். 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாட வந்தது. இதில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அணி போராட்டத்தைத் தொடங்கியது. ஆனால், தென் ஆப்பிரிக்க பவுலர்கள் புத்திசாலித்தனமாக பந்து வீசி ஆப்கானிஸ்தானின் வேகத்தை குறைத்து விட்டனர். இதனால் அதிரடி காட்ட முயன்ற ஆப்கானிஸ்தானால் அது முடியாமல் போய் 19 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்று விட்டது.
நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்த போட்டி ரசிகர்களுக்கு அட்டகாசமான ஒரு மதிய கிரிக்கெட் விருந்தை அளித்தது என்று கூறலாம். அப்படி ஒரு கூஸ்பம்ப் மேட்ச் இது.
பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!
சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி
அழகு தமிழ் ராகத்திலே ஆனந்தமாய் மெட்டு எடு அன்பாக மாமன் நெஞ்சம் அடியே நீ தொட்டுவிடு!
நான் நிரந்தரமானவன்.. திருச்சியில் அரங்கேறிய மரபுப் பா கவியரங்கம்!
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
நவீன நல்லதங்காள்!
சப்த கன்னியர், சப்த மாதர்கள் இரண்டும் ஒன்றா?
Dorothy Quick Review: திருநங்கைகளை இனி பார்த்தால் வணங்க வேண்டும்..!
நல் வாழ்வியல் சிந்தனைகள்.. பாராட்டினால் மகிழ்ச்சி.. அறிவுரை என்றால் கசக்குது!
{{comments.comment}}