- க. முருகேஸ்வரி
ஹாரன் சத்தம் கேட்கும் போதே.....
ஹார்ட் பீட்டும் அதிகரிக்கும் .....
தினமும் ஏறும் பஸ் தான், எனினும் ....
திடீரென்று ஏன் இந்த மாற்றம்??????
ஏறும்போது படபடப்பு .....
லேசாய் ஏனோ கிறுகிறுப்பு .....
வெளியில் எதுவும் காட்டாமல் .....
வீம்பாய் என்னுள் வீராப்பு.......

இப்போது தான் ஒலிக்க வேண்டுமா ?
அந்தப் பாடல்........
வளையோசை கலகலகலவென......
ஒவ்வொரு நாளும் ஒரு யுத்தம் ......
உன்னை சந்தித்த நாள் முதல் நித்தம்........
நீ பார்ப்பதை என் தோழியும்......
பார்வை படாமல் நான் மறைவதை........
உன் நட்புகளும் எள்ளி நகைக்க......
நாணம் வந்து ஒட்டிக்கொள்ள......
இனம் புரியாய் ஏக்கம் .....
கண்களாலே காதல் மொழி......
மௌனத்தின் மொழிக்கு.....
இவ்வளவு வலிமையா.....
அரை மணி நேரத்தில்......
அவ்வளவு உணர்ச்சிகள்......
அடுக்கடுக்காய் வந்து போகும் .......
விரல் கூட படவில்லை......
வெட்கம் மட்டும் ஏனோ விடவில்லை.......
இறங்கும் வரை நிமிரவில்லை.......
இறங்கிய பின் திரும்பி பார்த்து ......
ஒரு தெனாவட்டு சிரிப்பு......
எத்தனை நாள் இந்த நாடகம்????
இது காதல் என்னும் கபட நாடகம்!
(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}