- கவிதை மழை அ.நவஜோதி அருண்
முதற்கடவுள்
நீயம்மா
உயிரே...
உடலொரு
பாகமாய்
உன்னுள்
வைத்தாய்
எழுந்து
நடக்கையிலே
விழுந்திடாது
வயிறு
அடைத்தாய்

விநாயகர்
வீதியுலாப்போல்.
நிறை மாதம்
நடந்திருந்தாய்
கனத்தவாகு
களிறாகி...
நீயும்
கையூன்றி
எழுந்திருப்பாய்
சிரத்தையுடன்
சிசுவைத்
தாங்கி.....
தீராயின்பம்
திளைத்திருந்தாய்
அலுப்புத்தரா
ஆவலுடன்....
அனைத்து மாதம்
காத்திருந்தாய்
அணைத்தபடி
எனைத்
தூக்கிட,
ஆசையோடுத்
துடித்திருந்தாய்
கருப்பை
கிழித்துக்
கவிழ்ந்திடவே..
கண்ணீரோடு
கையிலெடுத்தாய்
உச்சி
முகர்ந்தே....
முத்தமிட்டாய்.
உடைவாளாய்
காத்திட்டாய்
அண்டமாள
அனைத்துமீந்த...
அன்னையே,
என்னுயிரின்
உறவே....!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Navajothi Arun Poem: அன்னைக்கோர் வாழ்த்து!
ரீல்ஸ் நமக்கு தேவையா?
பிரியாவிடை!
{{comments.comment}}