- தமிழ்மாமணி கவிஞர் இரா.கலைச்செல்வி
உண்மை என்னும் அஸ்திவாரம் இட்டு ,
உழைப்பு என்னும் செங்கற்களை அடுக்கி,
உலக வாழ்க்கை என்னும் வீட்டினை கட்டி,
உயர்ந்து வாழ்வோம் ஒவ்வொரு நாளும்.
உண்மையின் வெளிச்சம் நமக்கு வழிகாட்டும் ..!!
உழைப்பின் வெற்றி நமக்கு மகிழ்வுட்டும்..!!
உழைப்பு உன்னை அழைத்துச் செல்லும் உயரே ..!!
உயர்வு உனக்காக காத்திருக்கும் தனியே ..!!
பொய்யும் புரட்டும் உனக்கு வேண்டாம்..!!
எளிதாக கிடைக்கும் புகழும் வேண்டாம் .!!
ஏமாற்றிப் பெறும் வாழ்க்கையும் வேண்டாம் .!!
உழைப்பின் மீது நம்பிக்கை வை. வெற்றி நிச்சயம் ..!!

சிறு துளி கூட பெரு வெள்ளம் ஆகும் ..!!
சிறு முயற்சிகூட பெரும் வெற்றியாகும் ..!!
நம்பிக்கையோடு உழைத்திடு தோழா..!!
நல்வாழ்வு உனக்காக காத்திருக்கும் தோழா..!!
சோர்வின்றி உழைத்து சோம்பலை விரட்டு..!!
வெற்றியின் கனியை சுவைத்து மகிழ்ந்திடு..!!
உண்மை உழைப்பால் உயர்ந்து வளர்ந்திடு..!!
வாழ்வினில் நிம்மதி பெற்று வாழ்ந்திடு..!!
முயற்சி என்னும் மந்திரத்தால் ..!!
முடியாதது இவ்வுலகில் ஏதுமில்லை. .!!
ஒவ்வொரு தொழிலும் உயர்ந்த தொழிலே.!!
உழைப்பின் உயர்வை என்றும் போற்றுவோம்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ஆஸ்திரேலியாவை அதிர வைத்த பாகிஸ்தானி அப்பா மகன்.. 16 பேரின் உயிரைப் பறித்த கொடுமை
{{comments.comment}}