365 நாட்களும் கவிதை.. வீடு தேடி வரும் சான்டாவின் சர்ப்பிரைஸ் பரிசுகள்.. கலக்கும் Creative Writers

Dec 16, 2025,11:25 AM IST

சென்னை: ஆங்கில ஆசிரியையும், கவிஞருான டி. பிருந்தாவால் உருவாக்கப்பட்ட கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் (Creative Writers) குழு மிக மிக வித்தியாசமான பாதையில் நடை போட்டு அசர வைத்துக் கொண்டுள்ளது. 


எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட ஒரு சிறப்பான குழுவாக இது இயங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள அனைவருமே பெரும்பாலும் ஆசிரியர்கள்தான், எழுத்தின் மீது தீராத காதல் கொண்டவர்கள்.


பிருந்தா, கொரோனா காலத்தின்போது (COVID-19), வாட்ஸ்அப்பில் சிறிய குழுவாக இதைத் தொடங்கினார். இன்று, அது விருட்சமாக வளர்ந்து, பள்ளிச் சிறார்கள் முதல் ஆசிரியர்கள் வரை பலரையும் இணைக்கும் ஒரு பெரிய சமூகமாக வளர்ந்துள்ளது.


பிருந்தா இதுவரை 4,000-க்கும் அதிகமான கவிதைகளை எழுதியுள்ளார். இவை பல பத்திரிகைகள், தொகுப்புகள் மற்றும் உலகளாவிய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. 




ஆறு ஆண்டுகளாகத் தொய்வின்றி இயங்கும் இந்த வாட்ஸ்ஆப் குழு, புதிய எழுத்தாளர்கள் தங்கள் திறமையைக் காட்டவும், வளர்த்துக் கொள்ளவும் ஒரு மேடையாக இருக்கிறது. ஆண்டுதோறும் சிறந்த முயற்சிகளைப் பாராட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தக் குழுவில் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் (LSRW) போன்ற திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் புத்தகமாக (e-magazine) இங்கு இடம் பெறும் படைப்புகளை வெளியிடுகிறார்கள்.


உறுப்பினர்கள் தங்கள் கவிதைகளை ஓப்பன் மைக் நிகழ்ச்சிகளில் வாசிக்கிறார்கள். இவர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்டு, சென்னை சிட்டி FM ரேடியோவில் ஒலிபரப்பப்படுகின்றன.


ஒவ்வொரு மாதமும், 100-க்கும் மேற்பட்டோர் தவறாமல் எழுதுகிறார்கள். இவர்களுக்கு மின்-சான்றிதழ்கள் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள். ஆண்டுதோறும், ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து எழுதும் 16 முதல் 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சான்றிதழ்கள் மற்றும் சாண்டா கிளாஸ் பரிசுகள் கொடுத்துச் சிறப்பிக்கப்படுகிறார்கள்.


சீக்ரெட் சாண்டா திட்டம்




கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் குழு என்பது, இதயத்தில் இருந்து கவிதைகள் பிறக்கும் ஓர் இடம். இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும், சாண்டா கிளாஸ் போல, பாசமும், பெருந்தன்மையும் நிறைந்திருக்கிறது.


சாண்டா எப்படிப் பரிசு மூட்டையுடன் வந்து மகிழ்ச்சியைக் கொடுத்து, மறக்க முடியாத தருணங்களை ஒளிரச் செய்கிறாரோ, அதேபோல், இந்தக் குழு வெறும் வார்த்தைகளைப் பகிர்வதுடன் நின்றுவிடாமல், மற்றவர்களை ஊக்கப்படுத்தும் அன்பான பரிசுகளையும் வழங்குகிறது.


எழுத்தாளர்கள் தாமாக முன்வந்து, தாங்கள் விரும்பியவர்களுக்குப் பரிசு அனுப்பும் சீக்ரெட் சாண்டா (Secret Santa) திட்டம் அமோக வெற்றி பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். தினமும் எழுதும் 365 நாள் எழுத்தாளர்கள் தான் இந்தக் குழுவின் உயிர் நாடி. அவர்களின் ஒழுக்கமான முயற்சிக்கும், படைப்பாற்றலுக்கும் கைதட்டல் மட்டும் போதாது; ஆண்டின் முடிவில் ஒரு பரிசும் வேண்டும்.


இந்தப் பரிசளிப்புத் திட்டத்தின் நோக்கம் விலை உயர்ந்த பொருட்களைக் கொடுப்பது அல்ல. மாறாக, ஒருவரின் உழைப்பை அங்கீகரித்து, பாராட்டி, மகிழ்வுடன் பரிசளிக்கும் உணர்வை வெளிப்படுத்துவதுதான். சுருங்கச் சொல்வதானால், வழங்கப்படும் பரிசு பெறுபவர்களின் இதயத்தை வருடிக் கொடுத்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டுகிறது. நிறைய ஊக்கத்தைக் கொடுக்கிறது.


பரிசுப் பெட்டிகளைப் பிரிக்கும்போது எழுத்தாளர்கள் அடையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் வீடியோவில் பார்ப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.


ஊக்கமும், பாராட்டும், தட்டிக் கொடுத்தலும் படைப்பாளர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெரியும். அது அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை. அதனால்தான், இந்தப் பண்டிகைக் காலத்தில், குழுவின் நிர்வாகி பிருந்தா, தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்களைப் பாராட்ட, சிந்திக்கத் தூண்டும் அன்பான பரிசுகளை வழங்குவதற்கு இந்தத் திட்டத்தை வகுத்தார். இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுவது பாராட்டுக்குரியது.


(கட்டுரையாளர்: பிருந்தா. டி, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்பட்டாம்பாக்கம், கடலூர். creativewritersmag@gmail.com)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

news

தேடல்!

news

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

மார்கழி திங்கள் பிறந்ததம்மா!

news

Destination Maldives.. போவோமா ஊர்கோலம்.. அதுவும் நம்ம பட்ஜெட்டுக்குள்.. மாலத்தீவுக்கு!

news

சென்னையில் ரூ.39 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பனியும் கொட்டுது.. மழையும் பெய்யுது.. அப்படியே மூக்கும் ஒழுகுதா.. இந்தாங்க பாட்டி வைத்தியம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்