- அ.தாமஸ்
உறக்கம் நம்மைத் தழுவிடும் வேளை மூடும் கண்கள் திறக்காதே என நாம் நினைத்தால், உறங்கும் மனமே மறைந்துவிடும். உறக்கத்தையே நம் மனம் முற்றாய் தவிர்த்துவிடும். நாளைய விடியல் நமக்காக இருக்கும் என்றே நம்புகிறோம். நம்பிக்கை ஒன்றையே நமதாக்கி ஒவ்வொரு நாளும் உறங்குகிறோம்.
வாழும் நாள் ஒவ்வொன்றையும் இன்றே கடைசி என்று நினைத்து நாம் வாழ்ந்தாலே, ஒவ்வொரு மனிதரையும் மதித்திடுவோம்; ஒவ்வொரு நொடியையும் ரசித்திடுவோம். நிலையற்ற உலகில் நாமும் நிலையற்றவர்கள் என்பதை உணர்ந்திடுவோம்.

இறப்பு நம்மைத் தழுவாது என்ற திமிரில்தான் அலைகின்றோம். கடந்த நொடி நம் கையில் இல்லை; நாளைய நொடியும் நம் பையில் இல்லை என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியோடு கழித்திட நாம் நினைத்தாலே உறவுகளை மதிக்க நினைத்திடுவோம்; அவர்களின் மகிழ்வில் நிலைத்திடுவோம்.
சிரிப்பாரோடு சிரித்திடுவோம்; அழுகையிலும் நம்மை இணைத்திடுவோம். சிரிப்பும் அழுகையும் எந்நாளும் நம்மிலே மட்டுமே நிலைப்பதில்லை. நேற்று அவர்; இன்று நாம்; நாளை யாரோ? இதுதான் வாழ்க்கை! இவ்வளவுதான் வாழ்க்கை! இருந்தும் ஏன் நம்மிடையே இவ்வளவு தேவைகள் தேடும் வேட்கை?
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
சிந்தனைச் சிதறல்.. நாளைய விடியல் நமக்காக இருக்கும்!
பரிசு
Short Story: நல்ல பழக்கம்!
Chettinadu Recipes: வாய்க்குச் சுவையான ருசியில் எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி
பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்த வழக்கு : முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி
அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தல் நடத்த தடையில்லை ; 3 தொகுதிகளுக்கு தடை நீடிப்பு
என் காதல்
உன் காதணி பாடும் கவி என்னை கவிஞனாய் மாற்றுதடி!
இரவு!
{{comments.comment}}