ரஜினிகாந்த்தை இயக்கிய மனோபாலா.. விஜய் வரை விடாமல் நடித்தவர்..!

May 03, 2023,10:14 PM IST


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படம் இயக்கிய மனோபாலா, திரையுலகினர் அத்தனை பேருக்கும் பிடித்தவராக திகழ்ந்த பெருமைக்குரியவர். ஒரு ஆல்ரவுண்டராக சினிமாவில் பெரிய ரவுண்டு வந்தவரும் கூட.

கெச்சலான உடம்பு, பேசினாலே காமெடி கொப்பளிக்கும்.. வலிக்காத வார்த்தைகள்.. படு ஜாலியான பேர்வழி.. இதுதான் மனோபாலாவின் அடையாளம். ஒரு சினிமாக்காரனுக்கு இருக்க வேண்டிய அத்தனை அறிவும், தெளிவும், ஞானமும் மனோபாலாவுக்கு உண்டு.



பாரதிராஜாவின் பட்டறையிலிருந்து வந்தவர் மனோபாலா. புதியவார்ப்புகள்தான் இவரது முதல் படம். அங்கு ஆரம்பித்த இவரது பயணம் தொய்வே இல்லாமல் இன்று வரை தொடர்ந்தது மிகப் பெரிய விஷயம்.

உதவி இயக்குநராக, பின்னர் இயக்குநராக  ஆரம்பித்த இவரது பயணம் பின்னர் தயாரிப்பாளராக, நடிகராக, யூடியூபராக என பல பரிமாணங்களை எடுத்தது மனோபாலாவின் சிறப்பம்சம் ஆகும். பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்துள்ள மனோபாலா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன் படத்தை இயக்கினார். 

சரியாக 20 படங்களை இயக்கியுள்ளார் மனோபாலா. இதில்  பிள்ளை நிலா, ஊர்க்காவலன்,  சிறைப்பறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் ஆகியவை பேசப்பட்ட படங்களாகும்.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய இயக்குநராக வர முடியாவிட்டாலும் கூட மிகச் சிறந்த காமெடியனாக வலம் வந்தவர் மனோபாலா. கவுண்டமணி, வடிவேலு, விவேக் என தமிழ் சினிமா கண்ட மிகப் பெரிய காமெடியன்களுடன் இணைந்தும், தனித்தும் பல படங்கள் கொடுத்துள்ளார் மனோபாலா. இவர் இல்லாத தமிழ்ப் படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அத்தனை படங்களிலும் நடித்துள்ளார். மூத்தநடிகர்கள் தொடங்கி.. இளையவர்கள் வரை யாரையும் இவர் விடவில்லை.

வடிவேலு, விவேக்குடன் இவர் கொடுத்த படங்கள் இன்று வரை விலா நோக சிரிக்க வைப்பவை. சந்திரமுகியில் இவர் செய்த காமெடி வடிவேலுக்கு சமமாக பேசப்பட்டது. மாப்பிள்ளை படத்தில் இவரும் விவேக்கும் இணைந்து செய்த ரகளையை யாராலும் மறக்க முடியாது. சொல்லிக் கொண்டே போகலாம் இந்த மும்மூர்த்திகளின் கூட்டணியை

வேஸ்ட்பேப்பர் என்ற யூடியூப் சானலையும் சில ஆண்டுகளாக நடத்தி வந்தார் மனோபாலா. அதன் மூலம் திரைத்துற����ினரின் பல்வேறு பேட்டிகளையும் ரசிகர்களுக்குக் கொடுத்து வந்தார். ஒரு பக்கா ஆல்ரவுண்டர் என்று சொல்லக் கூடிய அளவுக்கு தமிழ்த் திரையுலகம் தனி முத்திரை பதித்தவர் மனோபாலா.. நிச்சயம் அவரது மரணம், சினிமாவுக்கு இழப்புதான்.

மனோபாலா திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி.. கல்லீரல் பிரச்சினை காரணமா?


சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்