புதிய கருத்தியல் தலைவராக உருவெடுத்துள்ளார் விஜய்.. எதிர்க்கத்தான் செய்வார்கள்.. ஆதவ் அர்ஜூனா

Dec 06, 2024,07:31 PM IST

சென்னை:  தமிழ்நாட்டின் புதிய கருத்தியல் தலைவராக உருவெடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய். ஆதிக்கத்தை எதிர்க்கும்போது விமர்சனங்கள் கடுமையாக வரத்தான் செய்யும் என்று கூறியுள்ளார் வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின் நிறுவனரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜூனா.


ஒரு விஜய் பட ஆடியோ லான்ச் விழா எப்படி இருக்குமோ அந்த ரேஞ்சுக்கு மாறி விட்டது, எல்லோருக்குமான அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா. விஜய்யின் வருகையால் ஆடியோ லான்ச் போல, ஒரு திரைப்பட விழா மாறிக் காணப்பட்டது இந்த புத்தக விழா.


விகடன் பிரசுரம் சார்பில் எல்லோருக்குமான அம்பேத்கர் புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜூனாவால் தொகுக்கப்பட்ட இந்த நூலை விஜய் வெளியிட முதல் பிரதியை முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். அண்ணல் அம்பேத்கரின் பேரனும், சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.


விழாவின் தொடக்கமாக எழுச்சிப் பாடல்களுடன் கூடிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தெருக்குரல் அறிவு உள்ளிட்ட கலைஞர்கள் இதை நடத்தினர். பின்னர் புத்தக வெளியீட்டு விழா தொடங்கியது. முதலில் ஆதவ் அர்ஜூனை உரையாற்றினார். தொடர்ந்து மற்றவர்கள் உரையாற்றவுள்ளனர்.




ஆதவ் அர்ஜூனாவின் பேச்சிலிருந்து:


தமிழ்நாட்டின் புதிய கருத்தியல் தலைவராக உருவெடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய். ஆதிக்கத்தை எதிர்க்கும்போது விமர்சிக்கத்தான் செய்வார்கள். 


எனது தாயாரும், பெரியம்மா முன்னாள் டிஜிபி திலகவதி ஆகியோர் சகோதரிகள். எனது பெரியம்மாதான் தமிழ்நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி. இளம் வயதில் எனது தாயார் ஒருவரைக் காதலித்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் அதை ஏற்கவில்லை.  வேலூரில் ஒரு விவசாயிக்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைத்தனர். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டபோது குடும்பம் பிரச்சினைகளை சந்தித்தது. மன வேதனையில் எனது தாயார் தற்கொலை செய்து கொண்டார்.


அப்போது டிஎஸ்பியாக இருந்த எனது பெரியம்மாவின் வழிகாட்டுதலில் நான் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். எனது பெரியம்மாதான் எனக்கு ரோல் மாடல். எனது தனிமையும், தாயாரை இழந்த வேதனையும், எனது பெரியம்மாவின் வழி காட்டலால் நூலகத்தை நோக்கி என்னைத் தள்ளியது. நிறைய படித்தேன். எனக்கு பெரியம்மாதான் ரோல் மாடல். போராடி ஐபிஎஸ் அதிகாரியாக வந்தவர். 


நான் படித்தபோது நக்சலைட் ஆக வேண்டும், மாவோயிஸ்ட் ஆக வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். அப்போது எனது பேராசிரியர்தான், சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்றால் கோபம் பழக வேண்டும். எதிர்த்துப் போராட வேண்டும். திட்டமிடல் வேண்டும் என்று வழிகாட்டினார். அதன் பிறகு பெரியாரையும், அம்பேத்கரையும் ஊன்றிப் படித்தேன், ஆய்வு செய்தேன். 


விஜய் தைரியமாக அரசியல் செய்ய வேண்டும்


ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் தைரியமாக சொன்னார். அதைச் சொல்ல பயம் ஏன்.. இனிமேல் அரசியலில் மறைத்து வைத்துப் பேசக் கூடாது. நெஞ்சுக்கு நேராக பேசுவோம். மிகப் பெரிய திரைத்துறை வாழ்க்கையை விட்டு விட்டு அரசியலுக்கு வந்தவர் விஜய். தமிழ்நாட்டு அரசியலில் மிகப் பெரிய வரலாறை இந்த மேடை படைக்கும்.


விஜய் அவர்களுக்கு கோரிக்கை.. ஊழலை எடுத்துப்  பேசுங்கள், மதவாதத்தை எடுத்துப் பேசுங்கள். திராவிடம் ஒன்றுதான். எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் திராவிடம். தமிழ் தேசியம் என்றால் எல்லோரும் சமம் என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார். அவ்வளவுதான். இங்கு ஜாதி அடிப்படையில் உருவாகக் கூடிய தேர்தல் அரசியல்தான் உள்ளது. தமிழ்நாட்டில் இது மிக மோசமாக உள்ளது.


உ.பியில் நாம் மதவாதம் இருக்கிறது என்று சொல்கிறோம். அதையேதானே இங்கும் செய்கிறோம். இந்த ஜாதி இங்கு அதிகமாக இருக்கு. அவரைப் போடு என்று ஜாதியைத்தானே இங்கு கையில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்துள்ளனர். இன்று வரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறையால் முடியாதது இல்லை. ஆனால் ஒரு அமைச்சர், எம்எல்ஏவால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.


25 சதவீதம் தான் உங்களுக்கு உள்ளது. இதை வைத்துக் கொண்டு எப்படி எங்களுக்கு அதிகாரம் தர மாட்டோம் என்று சொல்லலாம். மன்னராட்சிதான் இங்கு உள்ளது. ஏதாவது கருத்தை சொன்னால் உடனே சங்கி என்று சொல்கிறார்கள். எப்படி சொன்னாலும் சொல்லிக்கங்க.. மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். இனி மன்னராட்சிக்கு இங்கு இடமில்லை. அதிகாரத்தை நோக்கிப் போராடுங்கள், அதிகாரத்தை உருவாக்குங்கள் என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறியுள்ளார். அதை நாம் செய்ய வேண்டும் என்று பேசினார் ஆதவ் அர்ஜூனா.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்