ஆடி பதினெட்டாம் பெருக்கு, ஆடி அமாவாசை.. 1,140 சிறப்பு பேருந்துகள் ரெடி.. தமிழக அரசு அறிவிப்பு!

Aug 02, 2024,06:32 PM IST

சென்னை: வார இறுதி நாட்களையொட்டியும், ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டும் இன்று முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை 1140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பண்டிகை காலங்கள் என்றாலே மக்கள் குடும்பமாக கோயில்கள், சுற்றுலா தலங்கள் என தங்களின் பொழுதுகளை கழித்து வருகின்றனர். இதற்காக மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்காக போக்குவரத்து சேவை மிகவும் இன்றியமையாததாக திகழ்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.




முன்பு போல இப்போது இல்லை. 2 நாட்கள் சேர்ந்தாற் போல விடுமுறை வந்தாலே அரசுப் போக்குவரத்துக் கழகம், மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்குப் போவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  அந்த வரிசையில் இந்த வார இறுதி நாட்களில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை வருகிறது. காவிரியிலும் வெள்ளம் கரை புரண்டோடிக் கொண்டுள்ளது.


கிளம்பாக்கம் பேருந்து நிலையம்


இதையடுத்து மக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுக்க ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி,  சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 295 பேருந்துகளும், நாளை மறுநாள் 325 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.


அதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு கூடுதலாக நாளை 60 பேருந்துகள் மற்றும் நாளை மறுநாள் 60 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


மேல்மலையனூருக்கு 200 பஸ்கள்




ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மேல்மலையனூர் கோவிலுக்கு 200 சிறப்பு ஆபேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுதவிர ஆக.3ம் தேதி அதாவது சனிக்கிழமை சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து புண்ணிய தலமான ராமேஸ்வரத்திற்கு  செல்லவும், ஆக.4ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை  ராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 


இந்நிலையில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு  www.tnstc.in இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த சிறப்பு பேருந்துகள் குறித்து பயணிகளுக்கு வழிகாட்டவும் பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளனர்.


புறநகர் ரயில்கள் ரத்து


அதேபோல் பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதனை அடுத்து தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை விட கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 


அதன்படி தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போல் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்