சென்னை: விழாக்கள் என்றாலே மகிழ்ச்சிதான்.. மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் கட்டாயம் இனிப்பும் இருக்கும்.. அப்படிப்பட்ட சந்தோஷமான விழாக்களை சூப்பர் காம்போ ஆபருடன் கொண்டாடி மகிழ மக்களுக்கு ஆவின் அருமையான சலுகைகளை அறிவித்துள்ளது.
இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நாளை விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது. அடுத்து தீபாவளி இந்த மாத இறுதியில் வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சூப்பர் காம்போ ஆபர்களை அறிவித்துள்ளது.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு 3 விதமான காம்போ ஆபர்களை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த ஆபர்கள் விவரம்:

காம்போ 1
மைசூர் பா 200 கிராம் - ரூ. 140
மிக்சர் 200 கிராம் - ரூ. 100
குக்கீஸ் (2) 80 கிராம் - ரூ. 70
சாக்லேட் (1) 14 கிராம் - ரூ. 10
சிறப்பு காம்போ விலை மொத்தம் - ரூ. 300
காம்போ 2
நெய் பாதுஷா 250 கிராம் - ரூ. 190
குளோப்ஜாமுன் 250 கிராம் - ரூ. 100
பாதாம் மிக்ஸ் 200 கிராம் - ரூ. 120
மிக்சர் 200 கிராம் - ரூ. 100
சாக்லேட் (1) 25 கிராம் - ரூ. 20
சிறப்பு காம்போ விலை மொத்தம் - ரூ. 500
காம்போ 3
காஜு பிஸ்தா ரோல் 250 கிராம் ரூ. 320
காஜு கட்லி 250 கிராம் - ரூ. 260
நெய் பாதுஷா 250 கிராம் - ரூ. 190
முந்திரி அல்வா 250 கிராம் - ரூ. 19
சிறப்பு காம்போ விலை மொத்தம் - ரூ. 500
இது மட்டுமல்லாமல் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையும் சலுகை விலையில் தீபாவளி மற்றும் ஆயுத பூஜைக்காக விற்பனை செய்கிறது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ 700க்குப் பதில் ரூ. 690க்கும், அரை லிட்டர் ஆவின் நெய் ரூ. 365க்குப் பதில் ரூ. 360க்கும், அரை கிலோ வெண்ணெய் ரூ. 275க்குப் பதில் ரூ. 270க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}