டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை பெற தனது குடும்பத்துடன் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார் நடிகர் அஜித்குமார். இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.அதாவது மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகள் குறித்த அறிவிப்புகளை கடந்த ஜனவரி 25ஆம் மத்திய அரசு தேதி அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் விருதுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருதும், கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று மாலை டெல்லியில் மத்திய அரசின் உயரிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் நடிகரும் ரேஸ்ருமான அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இவ்விருதை வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் இவ்விருதையை பெற இருப்பதால் தனது குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.
அதே சமயம் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில், அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.
3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?
வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!
மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!
நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!
கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!
{{comments.comment}}