சென்னை: நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தையாகவே இருந்திருக்கிறீர்கள். உங்களைப் பார்த்து நான் எப்போதுமே நெகிழ்ந்து இருக்கிறேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா என நடிகை ஸ்ருதிஹாசன் தனது அப்பா கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இதனைத் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன், கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

நடிகர் கமலஹாசன் மற்றும் சரிகா தம்பதியின் மகள் ஆவார். உலக நாயகன் கமலஹாசன் நடிப்பு, இயக்குனர் டான்சர் சண்டை பயிற்சியாளர் தயாரிப்பாளர் பாடகர் என பன்முக கொண்ட கலைஞர். இப்படி பல்வேறு திறமைகள் கொண்ட கமலஹாசனின் பிரதிபலிப்பாகவே இருக்கிறார் மகள் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் வாரிசு என்ற பெயருக்கு ஏற்றார் போல் ஸ்ருதிஹாசன் நடிகையாக பாடகராக, தந்தை நடித்த உன்னை போல் ஒருவன் படத்திற்கு இசையமைப்பாளராக பன்முக திறமைகளை கொண்டவராக திகழ்கிறார்.
இது மட்டுமல்லாமல் இவர் நல்ல பேச்சுத் திறமை மற்றும் அமைப்பாளராகவும் செயல்படுகிறார். சமீபத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமலஹாசனின் வரிகளில் ஸ்ருதிஹாசனின் இசையமைப்பில் இனிமேல் ஆல்பம் ரிலீஸ் ஆனது. இதில் ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தனர். காதல் முதல் திருமணம் வரையிலான பந்தத்தை மையமாகக் கொண்டு உருவாகிய இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் படு ரொமான்ஸ் மூடில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தனது தந்தையின் 70 வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். அந்த வாழ்த்துக் குறிப்பில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. நீங்கள் மிகவும் அரிய மனிதர். உங்களுடன் இணைந்து நடப்பது எனக்கு எப்போதுமே பிடித்தமானது. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எப்போதும் நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையாகவே இருந்திருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் அத்தனை மாயாஜாலங்களையும் கண்டு நான் எப்போதும் நெகழ்ந்திருக்கிறேன் உங்களுக்கு இன்னும் பல பிறந்தநாள் வரவேண்டும். உங்களுடைய கனவுகள் அனைத்தும் பலிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}