சென்னை: நடிகர் மாதவன் இடையில் சற்று சதை போட்டு புசுபுசுவன்று காணப்பட்டார் இல்லையா.. இப்போது நன்றாக உடல் மெலிந்து ஸ்லிம் ஆகியுள்ளார். பழைய மேடி போலவே மாறியும் உள்ளார்.
பலரும் இதைப்பார்த்து அடடே எப்படி இருந்த மேடி இப்படி ஆயிட்டாரே என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். அதற்கான டிப்ஸையும் மாதவனே கொடுத்துள்ளார்.
அலைபாயுதே படத்தில் பார்த்த மாதவனைத்தான் இன்னும் பலரும் மனதில் வைத்துள்ளனர். அந்த மேடிக்கு நிகராக யாரையும் பார்க்க அவர்கள் தயாராகவே இல்லை. அந்த அளவுக்கு மாதவன் மீதான கிரேஸும், பாசமும் இன்னும் பலரிடம் மாறாமல் உள்ளது. சாக்லேட் பாயாக அறிமுகமாகி இடையில் ரக்ட் பாயாகவும் மாறி, அதிரடி ஹீரோவாக அதகளம் செய்து விதம் விதமாக நடித்து வித்தியாசமான நடிகராக மாறிப் போய் விட்டார் மாதவன்.
இடையில் அவர் சதை போட்டாற் போல மாறியிருந்தார். பலரும் என்னாச்சு மேடிக்கு, இப்படி வெயிட் போட்டுட்டாரே.. இது நம்ம மேடியே இல்லை என்று அக்கறையுடன் கேட்க ஆரம்பித்தனர். அது மேடிக்கு கேட்டுச்சோ என்னவோ டக்கென இப்போது வெயிட்டைக் குறைத்து ஸ்லிம் ஆகி விட்டார். இது அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் உடற்பயிற்சியே செய்யாமல் 21 நாட்களில் தனது எடையைக் குறைத்துள்ளாராம் மேடி. அதுதான் ஆச்சரியமாக உள்ளது .. எப்படி இது சாத்தியம் என்று. இதற்கான டிப்ஸையும் இப்போது கொடுத்துள்ளார் மாதவன்.
"ரொம்ப சிம்பிள்ங்க.. Intermittent fasting கடைப்பிடிங்க.. சாப்பிடுவதை நன்றாக மென்று சாப்பிடுங்க.. அதாவது திடமாக வயிற்றுக்குள் எதுவுமே போகக் கூடாது. நன்றாக திரவ நிலைக்கு மாறி வயிற்றுக்குள் தள்ள வேண்டும். அப்போதுதான் ஜீரணம் எளிதாக இருக்கும். இரவுச் சாப்பாட்டை மாலை 6.45 மணிக்கே முடித்து விடுங்க. மாலை 3 மணிக்கு மேல் வேக வைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுங்க.. வேக வைக்காத எதையும் சாப்பிடாதீங்க. அதிகாலையில் எழுந்து வாக்கிங் போங்க. இரவு சீக்கிரமே தூங்கப் போய்ருங்க. தூங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவே டிவி பார்ப்பது, மொபைல் பார்ப்பது போன்றவற்றை நிறுத்திடுங்க.
தினசரி நிறைய தண்ணீர் குடிங்க. நிறைய பச்சைக் காய்கறிகளை எடுத்துக்கங்க. உங்களது உடம்புக்குள் போகும் எதுவாக இருந்தாலும் அது செரிமானம் ஆக வேண்டும். அது முக்கியம். இது உங்களது உடல் நலத்தையும் பாதுகாக்கும், உடம்பின் மெட்டபாலிசத்தையும் சரியாக வைத்திருக்கும். பொறித்த உணவுகள், பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை முழுமையாக தவிருங்கள்.. அவ்வளவுதான்"
செஞ்சு தான் பார்க்கலாமே.. நம்ம உடம்பு நமக்கு முக்கியம் இல்லையா..!
ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!
ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி
இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?
தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!
சீறிப் பாயும் காளைகள்.. விறுவிறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பொங்கல் நாளில் கோலாகலம்!
பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!
மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?
மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
{{comments.comment}}