சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இந்தியாவை பொருளாதாரத்தில் சிறந்த நாடாக உருவெடுக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியவர். அதற்காக பாடும்பட்டவர். அதேபோல் ஏழை எளிய மக்களுக்காகவும் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி புரிந்தவர் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்பி பிரியங்கா காந்தி, காந்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் உடலுக்கு இறுதி சடங்கு நாளை அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவிற்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர். சிறந்த பொருளாதார நிபுணர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
தொடக்கம் என்பது முதன்மைதான்!
பற்றுகள் பற்றிக் கொண்டிராமல் சற்று பற்றற்று இரு!
கரூர் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்? பரபரக்கும் அரசியல் களம்
கடிகாரத்தை கொதிக்க வைத்து .. முட்டையில் டைம் பார்த்த ஐன்ஸ்டீன்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
அபிலாஷைகளை நிறைவேற்றும் அபிஜித் வழிபாடு!
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
{{comments.comment}}